அனிமல் படத்தின் வசூலை கெடுத்தது இவங்கதான்… இயக்குனரின் தடாலடி…

by ராம் சுதன் |

Animal: இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா டைரக்‌ஷன் என்பதே ரசிகர்களால் வித்தியாசமாக பார்க்கப்படும். அந்த வகையில் அவரின் கடைசி திரைப்படமான அனிமல் படத்தின் வசூலை கெடுத்தது குறித்து அவர் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு சில இயக்குனருக்கு என ஒரு ஸ்டைல் இருக்கும். அப்படி தான் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அவருடைய முதல் படமான அர்ஜூன் ரெட்டியை ரசிகர்களை வாயை பிளந்து பார்க்க வைத்தது. விஜய தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்திருந்தனர்.

கோபக்கார ஹீரோ தன்னுடைய காதலியிடம் முரண்பட்டு நடப்பதை போல காட்டி இருப்பார். அதிலும் அதிக நெருக்கமாக இருவரும் நடிக்க படம் ஒரு பக்கம் சூப்பர்ஹிட் அடித்தாலும் சந்தீப் ரெட்டியின் இயக்கம் பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அனிமல். அர்ஜூன் ரெட்டியை தாண்டி இருந்தது. ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த இப்படம் ரசிகர்களால அதிக அளவிலான விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது.

அப்பா மீது பாசம் கொண்ட மகன், கோபத்தையும் அவன் செயலும் எப்படி மாறுபடும் என்பது தான் கதையாக அமைந்தது. மேலும் வில்லன் பாபி தியோலின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. அவருக்கு இந்த படமே பெரிய அளவில் ரீ எண்ட்ரியாக அமைந்தது.

தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து சந்தீப் ரெட்டி வங்கா தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அதில் அவர் பேசும்போது அனிமல் படத்தின் வசூல் 300 கோடியுடன் நின்று இருந்தால் விமர்சகர்கள் படத்தினை பிளாப் ஆக்கி இருப்பர்கள். அவர்கள் தவறாக விமர்சனம் செய்ததாலே அப்படத்தின் வசூல் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். பல இயக்குனர்கள் தங்கள் படத்தினை கெடுத்தது விமர்சனம் செய்பவர்கள் தான் எனச் சொல்லி இருக்கும் நிலையில் சந்தீப் ரெட்டியும் தற்போது இணைந்து இருக்கிறார்.

Next Story