நயன்தாராவுக்கும்தான் கூட்டம் கூடுச்சு! வெறியாக்காதீங்க.. விஜய் பற்றி சீமான் ஆவேசம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:22  )

சமீபத்தில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து அரசியலை கதிகலங்க வைத்திருக்கிறார் விஜய். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நேரடியாக முதன் முறையாக எதிர்கொள்ளும் விஜய் கட்சி தொடங்கி தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த மாநாட்டில் அவர் பேசிய சில விஷயங்கள் அனைவரையும் கவனிக்க வைத்தது.

அதுவரை தனது படங்களின் இசை வெளியீட்டு விழா மேடையில் மட்டுமே பேசி வந்த விஜயை முதன்முறையாக அரசியல் மேடையில் பேசுவதை பார்த்த மக்களுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அந்தளவுக்கு வெறித்தனமாக பேசினார். ஒரு பக்கம் ஸ்கிரிப்ட் என்றாலும் ஒரு ஆக்ரோஷமான பேச்சாகவே பார்க்கப்பட்டது.

கூடவே அவருடைய கொள்கைகள் என்ன? நோக்கம் என்ன? போன்றவை பற்றியும் பேசியிருந்தார் விஜய். அதுவரை விஜய் என் தம்பி.. அண்ணனும் தம்பியும் ஒரே வழியில் பயணிக்கும் காலம் வரும் என்றெல்லாம் பேசி வந்த சீமான் விஜயின் மாநாட்டிற்கு பிறகு மொத்தமாக மாறிப்போனார் என்றுதான் சொல்லவேண்டும்.

விஜய் கூறியது கொள்கை அல்ல. அழுகிப் போன கூமுட்டை. சாலையில் ஒன்னு அந்தப் பக்கம் நின்னு. இல்ல இந்தப் பக்கம் நின்னு. நடுவுல நின்னு லாரில அடிபட்டு செத்துடுவ.தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா ப்ரோ? வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ. எங்கள் லட்சியத்திற்கு எதிராக தகப்பனே வந்து நின்னாலும் எதிரிதான். அதுல தம்பியும் இல்ல. அண்ணனும் இல்ல.

வரும் 2026ல் என்னுடைய ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது. இது சும்மா டிரைய்லர்தான் என்றெல்லாம் கடுமையாக பேசியிருந்தார் சீமான், இதற்கிடையில் விஜயை பற்றி பேசிய சில விஷயங்களும் வைரலாகி வருகின்றது.

அதாவது மாநாட்டில் கூடியவர்கள் ரசிகர்கள். ரசிகர்கள் வேறு. போராளிகள் வேறு. என்னிடம் இருப்பவர்கள் போராளிகள். சேலத்தில் நயன்தாரா வந்த போது 4 லட்சம் பேரு கூடினான். கூட்டத்தை வச்சி பேசக்கூடாது தம்பி. எனக்கு 36 லட்சம் பேரு ஓட்டு போட்டான். அவர் மாநாட்டுல எத்தனை பேரு கூடினான். காலையிலேயே வெறியாக்கக் கூடாது என்று கடுமையாக பேசியிருக்கிறார் சீமான்.

Next Story