விஜய் கொடுத்த துப்பாக்கி.. சும்மா ஒன்னும் நடக்கல! யுனிவெர்சல் கனெக்ட்டான நடிகர் SK

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:35  )

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கோட் படத்தில் விஜய் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கி கொடுத்ததில் இருந்து ஹாட் டாப்பிக்காக இந்த விஷயம் மாறியது. உடனே ரசிகர்கள் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என வைரலாக்கி வந்தனர். இது சம்பந்தமான பல செய்திகள் சோசியல் மீடியாக்களில் வெளியாகிக் கொண்டே இருந்தன.

மேலும் சிவகார்த்திகேயன் இப்போது அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷனில் கூட விஜய் கொடுத்த துப்பாக்கியின் கணம் எப்படி இருந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டது. இப்படி எங்கு போனாலும் விஜய் சிவகார்த்திகேயன் பற்றிய செய்திதான் ஓடிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்தியேனின் அர்ப்பணிப்பு, உழைப்பு பற்றி சீரியல் நடிகரான ஸ்ரீகுமார் கூறியிருக்கிறார்.

ஸ்ரீகுமாரும் அமரன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ஸ்ரீகுமார் சொல்லும் போது நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் ஏதாவது ஒரு விதத்தில் கனெக்ட் ஆகியே இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அப்படி இல்லை.

விஜய் தெரிந்து கொடுத்தாரா தெரியாமல் கொடுத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் விஜய் கொடுத்த சின்ன துப்பாக்கியால் சிவகார்த்திகேயன் அடுத்து உண்மையிலேயே ஒரு ஏகே 47 பெரிய துப்பாக்கியை பிடிக்கும் மாதிரி ஆகிவிட்டது. அதை போல அஜித்துக்கு பிடித்தமான நடிகாராகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

இன்னொரு பக்கம் கமல் நம்பி இப்படி ஒரு படத்தை சிவகார்த்திகேயனிடம் கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் ரஜினியின் நம்பிக்கையான நட்சத்திரமாகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார் .இப்படி ஒரு யுனிவெர்ஷல் கனெக்ட் மேனாக சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

இது அவரை மேலும் பல வளர்ச்சியை அடைய ஒரு தூண்டுகோலாக இருக்கும். அவருடைய டெடிகேஷன், கடின உழைப்பு இவற்றுக்கு சிவகார்த்திகேயன் நிச்சயமாக ஒரு இடத்தை அடைவார் என்றும் ஸ்ரீகுமார் கூறினார்,.

Next Story