Categories: latest news

அமரன் படத்துக்கும் பராசக்தி படத்துக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கா?.. லிஸ்டு போட்ட ஃபேன்ஸ்..!

தமிழ் சினிமாவில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு படு பிஸியாக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றி சிவகார்த்திகேயனை மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது. இப்படத்தை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது என்று கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதற்கு இடையில் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் எஸ்கே 25 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது.

இந்த திரைப்படத்திற்கு பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டிருக்கின்றது. படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியான சில தினங்களிலேயே ஷூட்டிங் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக படத்தை எடுத்து வருகிறார்கள். நேற்று படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்தத் திரைப்படம் 1965 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்பே கூறியிருந்தாலும் டீசரும் அதற்கேற்ற வகையில் 1960 மற்றும் 70 காலகட்டங்களில் எடுக்கப்பட்டிருந்தது போன்று காட்டப்பட்டிருந்தது.

டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் அமரன் திரைப்படத்திற்கும் பராசக்தி திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை ரசிகர்கள் லிஸ்ட் போட்டு காட்டி இருக்கிறார்கள். இதில் முதல் ஒற்றுமையாக பார்க்கப்படுவது படத்தின் டைட்டில் தான்.

அமரன் என்கின்ற படத்தின் டைட்டில் பழைய டைட்டில், அதேபோல பராசக்தி என்கின்ற படத்தின் டைட்டிலும் சிவாஜி நடிப்பில் வெளிவந்த படத்தின் டைட்டில் ஆகும். 2வது ஒற்றுமை இரண்டு திரைப்படங்களும் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்றது. அமரன் திரைப்படம் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

அதேபோல பராசக்தி திரைப்படமும் 1965 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகின்றது. அதாவது 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழி போராட்டத்தில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயிர்நீத்த மாணவர் ராஜேந்திரன் அவர்களின் வாழ்க்கையை பற்றிய படமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

அமரன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் அனைவரையும் அழ வைத்திருக்கும். படம் பார்த்த அனைவரையும் எமோஷனலாக பாதித்திருக்கும். அப்படித்தான் பராசக்தி படத்தின் கிளைமாக்ஸ்சும் எமோஷனலாக இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும் அமரன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பார்.

பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்த நிலையில் பராசக்தி திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கின்றார். இப்படத்தில் உள்ள பாடல்களில் மூன்று பாடல்கள் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று ஜிவி பிரகாஷ் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya suresh

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

2 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

4 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

5 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

6 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

9 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

22 hours ago