தப்பித்தது சிவாஜி வீடு... இனி எல்லாம் பிரபுவுக்குத்தான்!?

தற்போது சிவாஜியின் அன்னை இல்லம் பற்றிய செய்திகள்தான் எங்கு பார்த்தாலும் அடிபட்டு வருகிறது. ஒரு படத்துக்காக வாங்கிய 3 கோடி ரூபாய் கடன் வட்டி மேல வட்டி போட்டு ஒன்பதரை கோடியாகி விட்டது. அந்தக் கடனை அடைக்க முடியாமல் சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தின்னு செய்தி வந்ததும் திரையுலகமே அண்ணாந்து பார்த்தது. இந்த விஷயத்தை சாதாரண ரசிகர்கள், பொதுமக்கள் வரை அலசினார்கள்.
எப்படி தீரப்போகுது?: கடந்த சில நாள்களாகவே இந்தப் பிரச்சனைக்கு யார் காரணம்? எப்படி தீரப்போகுதுன்னு பலரும் தங்கள் இஷ்டத்துக்கு வலைதளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. இதுகுறித்து சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் சுபையர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
சிவாஜி வீடு ஜப்தி: ஒரு படம் தயாரிக்கிறதுக்கு 3 கோடி ரூபாய் கடன் வாங்கி அது கிட்டத்தட்ட 9 கோடிக்குப் போகுது. அந்தக் கடனில் பேச்சுவார்த்தை எட்டப்படாமல் கோர்ட்டுக்குப் போகுது. அங்க ஒரு நடுவரை நியமிச்சிப் பேசிப் பார்க்குறாங்க. அப்பவும் பிரச்சனையைத் தீர்க்க முடியல.
அப்புறம் நீதிமன்றம் அன்னை இல்லத்தை ஜப்தி பண்ணி கொடுக்க வேண்டிய 9 கோடியை எடுத்துட்டு மீதியைக் கொடுக்கச் சொல்லி ஆர்டர் போட்டாங்க. இதுக்கு அப்புறம் சிவாஜி வீடு ஜப்தின்னு செய்தி வந்தது. பரபரப்பா பேசுனாங்க.
ராம்குமார்: இப்ப என்ன நடந்துருக்குன்னா? ராம்குமார் தரப்பிலிருந்து துஷ்யந்துக்கும் அந்த வீட்டுக்கும் சம்பந்தம் கிடையாது. எனக்கும் அந்த வீட்டுக்குமே சம்பந்தம் கிடையாது. அந்த அன்னை இல்லம் முழுவதுமாக பிரபுவோட பேருல இருக்குன்னு சொல்லிட்டாங்க. கோர்ட் இந்த வழக்கை எடுத்துக்கிட்டது. நீங்க டாக்குமெண்ட் கொடுங்க. நாங்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குறோம்னு சொல்லிட்டாங்க.
அன்னை இல்லம் தப்பித்தது: ஒருவேளை அவங்களுக்குள்ள சொத்துப் பாகப்பிரிவினை பண்ணி அந்த குறிப்பிட்ட சொத்து ஒருவேளை பிரபு கையில் இருந்தால் பிரச்சனை இதோடு முடிஞ்சிடும். அன்னை இல்லம் தப்பித்தது. அந்த சந்தோஷமான செய்தி இப்போ வந்துருக்கு. உண்மை நிலவரம் அதுதான்.
அவங்க சொத்தைப் பிரிச்சிருக்காங்க போல. அதனால இந்தச் சொத்து பிரபு பேருல இருக்குறதால ராம்குமாருக்கும், துஷ்யந்துக்கும் இதுல சம்பந்தமில்லை. அதனால இந்த வழக்கு பெரிசாகப் பாதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.