இயக்குனர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் எஸ்.கே!... கமல் பட இயக்குனருக்கே ரூட்டு போட்டாரே!...

Sivakarthikeyan: டிவியில் ஆங்கராக வேலை பார்த்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கி எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களால் டேக் ஆப் ஆனவர் சிவகார்த்திகேயன். மிகவும் குறுகிய காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி சீனியர் நடிகர்களுக்கே பொறாமையை ஏற்படுத்தினார்.
அமரன் வசூல்: இவரின் இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகள் சுட்டதில் மரணமடைந்த முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது.
இந்த படம் சிவகார்த்திகேயனையே மாற்றிவிட்டது. ஏனெனில், இதுவரை காதல் கலந்த காமெடி கதைகளில் நடித்து வந்த அவர் இப்போது சீரியஸான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிவிட்டார். இயக்குனர்களையும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அமரன் படத்திற்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார்.
சுதாகொங்கரா பராசக்தி: அமரன் படத்தை முடித்துவிட்டு சுதாகொங்கராவை தொடர்பு கொண்டு பேசி இப்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு படத்தின் கதை. 1965ம் வருடம் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கால கட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பெரிய நிறுவனம், பெரிய இயக்குனர்களை டார்கெட் செய்யும் சிவகார்த்திகேயன் வாய்ப்புக்காக காத்திருப்பதில்லை. அவரே சென்று இயக்குனர்களிடம் பேசுகிறார்கள். சுதாகொங்கராவிடம் அப்படி பேசிதான் பராசக்தி வாய்ப்பை பெற்றார். முருகதாஸ் படமும் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்.
அன்பு அறிவு: தமிழ் சினிமாவில் விக்ரம் உள்ளிட்ட பெரிய படங்களில் சண்டை காட்சிகளை அமைத்த அன்பு - அறிவு இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். கமலை வைத்து அவர்கள் இயக்கும் படம் விரைவில் துவங்கவுள்ளது. இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என கணக்குப்போட்ட எஸ்.கே அவர்களை தொடர்பு கொண்டு ‘நாம் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என பேசியிருக்கிறாராம்.
மொத்தத்தில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு இயக்குனர்களை தூக்கி வருகிறார் எஸ்.கே. பொதுவாக பெரிய நடிகர்கள் இயக்குனர்கள் தங்களை தேடி வரட்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், எஸ்.கே.வின் ரூட் புதிதாக இருக்கிறது. கண்டிப்பாக இது அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றே பாராட்டுகிறது கோலிவுட்.