1. Home
  2. Cinema News

BookMyShow-வில் அமரன் செய்த சாதனை!.. எந்த ஹீரோவுக்கும் இப்படி இல்லையாமே!..


Amaran movie: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவில் தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதேநேரம், நிறைய சறுக்கல்களையும் சினிமாவில் சந்தித்த நடிகர் இவர். படங்கள் நன்றாகவே ஓடவே சொந்த படம் எடுக்க ஆசைப்பட்டு பல கோடி கடனாளியாக மாறினார்.

அதன்பின் அவரின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும் பஞ்சாயத்து நடக்கும். சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தில் சில கோடிகளை கடனுக்காக கொடுப்பார். அல்லது முழு சம்பளமும் கடனில் போய்விடும். மேலும், ‘உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன்’ என சொல்லி சில தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கி கடனை அடைப்பார்.

இப்படி பல வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அவரின் கடன் முழுவதுமாக முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள். இந்நிலையில்தான் அவரின் அமரன் படம் நாளை வெளியாகவுள்ளது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார்.


இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது. எனவே, சிவகார்த்திகேயன் தனது முழு அர்ப்பணிப்பையும் இப்படத்திற்காக கொடுத்திருக்கிறார்.

நாளை வெளியாகவுள்ள நிலையில் ஆன்லைன் புக்கிங்கில் இப்படம் நிறைய சாதனைகளை செய்து வருகிறது. ஏற்கனவே வெளிநாடுகளில் இப்படத்திற்கு நல்ல ஒப்பனிங் இருக்கிறது. தமிழகத்தில் 6.5 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. தனுஷின் ராயன் படத்தை ஒப்பிட்டால் இது அதிகம் என சொல்லப்படுகிறது.

மேலும், பெரும்பாலானோர் சினிமா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயன்படுத்தும் BookMyShow தளத்தில் ஒரு மணி நேரத்தில் அமரன் படத்திற்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருக்கிறது. சமீபத்தில் வேறெந்த படமும் டிக்கெட் முன்பதிவில் இப்படி ஒரு சாதனை செய்யவில்லை என்கிறார்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.