அந்தப் படத்தோட ஒப்பிடவே முடியாது! அமரன் குறித்து கமல் இப்படி சொல்லிட்டாரே
தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஏழு சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் கமலுக்கு இருக்கும் பிசியான ஷெட்யூல் காரணமாக இனிமேல் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
அதன் பின்னரே விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் கமலுக்கும் விஜய் சேதுபதிக்கும் இருக்கும் வித்தியாசங்களை ஒவ்வொன்றாக ஒப்பிட்டுக் கூறி இருக்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு .
அதாவது ஆரம்பத்தில் விஜய் சேதுபதி நன்றாக பேசுகிறார். இப்படித்தான் இருப்பார் .போகப் போக சமுத்திரக்கனி மாதிரி விஜய் சேதுபதியும் மாறிவிடுவார் என ஒரு பக்கம் விமர்சனம் போய்க்கொண்டிருக்கின்றது .
இதையெல்லாம் தாண்டி கமல் கொஞ்சம் இழுத்து பேசுகிறவர். ஒரு சூப்பர் சீனியர். திறமையான பேச்சாளர். ஆடியன்ஸ் கமலிடம் பேசுவதற்கு கொஞ்சம் பயப்படுவார்கள். ஆனால் விஜய் சேதுபதியிடம் அப்படி இல்லை. மிகவும் ஃப்ரீயாக அவரிடம் பேச முடிகிறது.
நேற்று வந்த போட்டியாளர்கள் உட்பட அனைவருமே விஜய் சேதுபதியிடம் சகஜமாகத்தான் பேசிவிட்டு சென்றார்கள் என இப்படி ஒரு விமர்சனம் போய்க்கொண்டிருக்கின்றது.
ஏனெனில் கமல் வந்து நிற்கும் பொழுதே ஒரு கம்பீரமான தோரணையுடன் வந்து நிற்பார் .வந்ததும் சொல்லுங்க பிக் பாஸ் என அவருடைய கனத்த குரலில் பேசுவதை கேட்கும் போது அரங்கமே அதிரும். அந்த அளவுக்கு அவருடைய ஆளுமை பெரிதாக பார்க்கப்படும்.
இந்த ஆளுமை தான் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை வார இறுதி நாள்களில் பதற வைக்கும். வாரம் முழுவதும் அமர்க்களப்படுத்தும் அந்த போட்டியாளர்கள் சனி, ஞாயிறு வந்தால் அடங்கி போய் விடுவதை நம்மால் பார்க்க முடிந்தது.
இதையெல்லாம் தாண்டி விஜய் சேதுபதி என்ன பண்ணப் போகிறார்? எப்படி பண்ணப் போகிறார் என நினைக்கும் போது விஜய் சேதுபதியும் நான் அரக்கனாக கூட மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறுவதை நேற்று பார்க்க முடிந்தது .
இதையெல்லாம் மீறி பிக் பாஸில் கடந்த ஏழு சீசன்களாக கமல்ஹாசனை வைத்து செய்ய முடியாததை இப்போது உள்ள சீசனில் விஜய் சேதுபதியை வைத்து செய்ய திட்டமிட்டு இருப்பதாக செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அதாவது கமல்ஹாசனிடம் சில ஐடியாக்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் சொல்லி அதை கமலஹாசன் ஏற்க மறுத்திருக்கலாம் .
இதன் காரணமாகவே கமல்ஹாசன் ஐந்தாவது சீசனிலேயே இதை என்னால் பண்ண முடியாது. அதனால் நான் வெளியேறுகிறேன் என கூறியிருந்தார் .அவர் அப்படி சொன்னதுமே சம்பந்தப்பட்ட நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. அதன் பிறகு கமல்ஹாசன் வழிக்கு மொத்த டீமும் வந்தது என செய்யாறு பாலு கூறியிருக்கிறார் .
இப்போது இந்த சீசனில் கமல்ஹாசன் விலகி இருப்பதால் கமலஹாசனிடம் சொன்னதை எல்லாம் விஜய் சேதுபதியிடம் சொல்லி செய்யப்போவதாக செய்யாரு பாலு கூறியிருக்கிறார். அதற்குத்தான் விஜய் சேதுபதிக்கு 15 லிருந்து 18 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்ட இருப்பதாகவும் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
இது எல்லாமே தன்னுடைய சேனலின் டிஆர்பிஐ உயர்த்துவதற்காக தான் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த சீசன் பெரும் கலேபரமாக தான் இருக்கப்போகிறது. அதுவும் கமலிடம் எதிர்பார்த்தது கண்டிப்பாக விஜய் சேதுபதியிடம் இருக்காது. அவருடைய போக்கே வேறு மாதிரியாக இருக்கும் என்றும் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.