ஐந்து மொழி… உச்சக்கட்ட சூப்பர்ஸ்டார்கள்… சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு புரோமோஷனா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:16  )

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் செய்த சிறப்பு ரோல் அவருடைய கேரியரை மாற்றிவிட்டது என்று தான் கூற வேண்டும். தற்போது கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை தக்க வைத்து விட்டார்.

அவருடைய நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மறைந்த ராணுவ வீரர் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். முகுந்த் வரதராஜனின் மனைவி ரெபெக்கா வர்கீஸ் வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இதை அதிகாரப்பூர்வமாக ஐந்து மொழிகளில் படக்குழு வெளியிட இருக்கிறது. தமிழில் கமல்ஹாசன், ஹிந்தியில் அமீர்கான், மலையாளத்தில் டோவினோ தாமஸ், தெலுங்கில் நானி, கன்னடத்தில் சிவராஜ்குமார் வெளியிட இருக்கின்றனர்.

முதன்முறையாக சிவகார்த்திகேயனின் படத்திற்கு 5 மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து இருக்கின்றனர். விஜயின் டயலாக்கால் தற்போது அவருடைய ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை சிவகார்த்திகேயனுக்கு கொடுக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

அமரன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டால் சிவகார்த்திகேயனின் இடத்தை இனி யாராலும் தட்ட முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. வரும் 31ஆம் தேதி திரைப்படம் ரிலீஸாக இருப்பதால் விமர்சனங்களை வைத்து என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

Next Story