ஜெயம் ரவிக்காக SK செய்த பெருமை… நெகிழ வைத்த அந்த தரமான சம்பவம் இதுதான்..!

Published on: March 18, 2025
---Advertisement---

சிவகார்த்திகேயனுக்கு அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. எஸ்கே 23 படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடந்து வருகிறது. இது முடியும் தருவாயில் உள்ளது. எஸ்.கே.24 சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தயாராக உள்ளது. தொடர்ந்து எஸ்கே.25 படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்கே 25 படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஏற்கனவே சூர்யாவை வைத்து புறநானூறு என்ற பெயரில் இந்தப் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் சூர்யாவுக்கு கதையில் உடன்பாடு இல்லாததால் அவர் விலகினார். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பெரும் பொருட்செலவில் இந்தப் படம் உருவாக உள்ளது.

இந்தப் படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தில் ஒரு ஹைலைட்டான விஷயம் பூஜையின் போது நடந்துள்ளது. அதாவது படத்தின் பூஜையின் போது ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேனரில் முதலில் இடம்பெற்றது ஜெயம் ரவியின் பெயர்.

அதன்பிறகு சிவகார்த்திகேயனின் பெயரும், அதர்வாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. சிவகார்த்திகேயனின் படம் தானே. பிறகு ஏன் முதலில் ஜெயம் ரவியின் பெயர் போடப்பட்டுள்ளது என்று நினைத்தனர். அப்புறம்தான் விஷயமே தெரிகிறது. என்னன்னு பாருங்க.

ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர் சீனியர் நடிகர் என்பதால் அவரது பெயரை பேனரில் முதலில் இடம்பெறச் செய்துள்ளாராம் சிவகார்த்திகேயன். அவருடைய இந்த பெருந்தன்மையான விஷயத்தைத் திரையுலகினர் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

soorarai potru

soorarai potru

சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் சுதா கொங்கரா. படத்தின் சூட்டிங் தொடங்குவதில் காலதாமதம் ஆனதால் தான் சூர்யா விலகியதாக பேச்சு அடிபடுகிறது.

இன்னும் சிலர் சுதா கொங்கராவுக்கும், சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம். அதனால் தான் சத்தம் போடாமல் வெளியேறி விட்டார் சூர்யா என்கிறார்கள். இன்னும் சிலர் கதையில் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை என்பதால் விலகிவிட்டார் என்கிறார்கள். எது உண்மை என்று தெரியவில்லை.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment