முஸ்தபா முஸ்தபா! ‘அமரன்’ பட நடிகருடன் காஷ்மீரில் சிவகார்த்திகேயன் பைக் ரைடு.. வைரலாகும் வீடியோ

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:49  )

தமிழ் சினிமாவில் இப்போது பரப்பரப்பாக பேசப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் தான் என அனைவரும் பேசிக் கொண்டு வருகிறார்கள். அந்தளவுக்கு தனது அடுத்தடுத்த படங்களால் மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு படங்களில் சிவகார்த்திகேயனின் அபரா வளர்ச்சியை பார்க்க முடிகிறது.

ஆரம்பத்தில் நகைச்சுவை கலந்த படங்களில் நடித்து குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகராக மாறினார். அதன் பிறகு காதல் செண்டிமெண்ட் என ஒரு பக்கா ஃபேமிலி எண்டெர்டெயினராகவும் மாறினார். அதனை தொடர்ந்து ஆக்‌ஷன் கமெர்ஷியல் என ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இப்போது ஜொலித்துக் கொண்டு வருகிறார்.

நேற்று அவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. சிவகார்த்திகேயனை இதுவரை யாரும் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் பார்த்தது இல்லை. பக்கா மிலிட்டரி மேனாக அமரன் திரைப்படத்தில் கட்டுமஸ்தான உடம்போடு தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பார்டரில் ஒரு மிலிட்டர் மேன் எந்தளவுக்கு தனது நாட்டுக்காக ஆக்ரோஷமாக போராடுவார்களோ அதை அப்படியே தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து கைத்தட்டல்களை பரிசாக கொடுப்பதை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் காஷ்மீரில் தனது சக நடிகருடன் சிவகார்த்திகேயன் ஜாலியாக பைக் ரைடு செய்த வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அமரன் திரைப்படத்தில் விக்ரம் சிங் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனுடன் படமுழுக்க டிராவல் செய்திருப்பார் ஒரு நடிகர். அவருடன் சேர்ந்து தனது பைக் ரைடை மேற்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DB0d_JYvBTa/?utm_source=ig_web_copy_link

Next Story