என்னை பார்த்து அஜித் ஒன்னு சொன்னார்!.. அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சது!.. எஸ்.கே. நெகிழ்ச்சி!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:45  )

நேற்று சென்னையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இது ஒரு மிலிட்டரி சார்ந்த படமாக இருந்தாலும் இந்த கதைக்குள் ஒரு அற்புதமான காதல் கதையும் இருப்பதாக ட்ரைலரை பார்க்கும் பொழுது நமக்கு தெரிகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் கூடியிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் பேசிய சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக அஜித்தை பற்றி அவர் பேசியது ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் மனதில் சிவகார்த்திகேயன் முழுவதுமாக நிறைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சமயம் சிவகார்த்திகேயன் அவருடைய நண்பரின் தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்றபோது அங்கு அஜித் இருந்ததாகவும் சிவகார்த்திகேயனை பார்த்ததும் அஜித் வெல்கம் டு பிக் லீக் என சொன்னதாகவும் கூறினார்.

அஜித் அப்படி சொன்னதும் தனக்கு அது புரியவில்லை. மறுபடியும் அஜித்திடம் புரியல சார் என சிவகார்த்திகேயன் கேட்டதாகவும் அதற்கு அஜித் உங்களுடைய வளர்ச்சியை பார்த்து சில பேர் இன்செக்யூரா ஃபீல் பண்றாங்க அப்படின்னா நீங்க பிக் லீக்கில் வந்து விட்டீர்கள் என்று கூறியதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார்.

மேலும் இதைப் பற்றி கூறிய சிவகார்த்திகேயன் தனக்கு சீனியரா இருக்கும் அஜித் என்னை அழைத்து சிவா இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் என அட்வைஸ் வழங்கி இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் நான் புரிந்து கொண்டது ஒரு விமர்சனம் நம் மீது வைக்கப்பட்டால் அதில் உள்ள அர்த்தத்தை முதலில் நாம் பார்க்க வேண்டும் என்று தான் அங்கு நான் தெரிஞ்சுகிட்டேன்.

படம் சரியில்லை என்பது சரியான விமர்சனம். அப்போது படத்தை சரியாக கொண்டு போக வேண்டும் என்பதுதான் அதனுடைய தீர்வு. ஆனால் அதுவே நாம் காலி என ஒரு விமர்சனம் வந்தால் அதை நம்பாதே என்பதை அன்று அஜித் கூறிய பிறகு தான் நான் புரிந்து கொண்டேன் என சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசியிருந்தார்.

Next Story