விஜய்க்குத்தான் பிரச்னை சிவகார்த்திகேயனுக்கு இல்லை!.. இலங்கைக்கு போன எஸ்கேவுக்கு வரவேற்பை பாருங்க!

ராசக்தி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அதற்காக இலங்கைக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படத்திற்கு இலங்கையில் படப்பிடிப்பை நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டு இருந்தார். ஆனால் அரசியலில் இறங்கியுள்ள விஜய் இலங்கையில் படப்பிடிப்பை நடத்தினால் சர்ச்சைகள் உண்டாகும் என்பதற்காக கேரளாவுக்கு அந்த படத்தின் படப்பிடிப்பு மாற்றப்பட்டது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய கதையாக உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தின் சில பீரியட் காட்சிகளை இலங்கையில் எடுக்க வேண்டிய சூழல் காரணமாக தற்போது சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் அடங்கிய குழு இலங்கையில் முகாமிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா என படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இலங்கையில் நடைபெறும் போர்ஷனில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒல்லியான தோற்றத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்த ஒரு நிலையில், இலங்கைக்கு வந்த அவரை மாலை சூடி பெண்கள் வரவேற்க அவர்களுடன் நின்று புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டு புன்னகையுடன் சென்றுள்ளார் சிவகார்த்திகேயன்.
பராசக்தி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வருமா அல்லது விஜயின் ஜனநாயகன் படத்துடன் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மோதுமா என்கிற கேள்விகள் தமிழ் சினிமாவில் எழுந்துள்ளன. துப்பாக்கி கொடுத்த விஜய்க்கு கண்டிப்பாக சிவகார்த்திகேயன் துரோகம் செய்ய மாட்டார் என்றும் கூறுகின்றனர்.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர்கள் அப்படி ஒரு முடிவு எடுத்து விட்டால் அது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கிளாஷ் ஆக மாறும் என்றும் கூறுகின்றனர். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என்றும் பராசக்தி படத்திற்கான போர்ஷன்களை முடித்துவிட்டு தான் மதராஸி பக்கம் சிவகார்த்திகேயன் திரும்புவார் என்றும் கூறுகின்றனர். இலங்கையில் சிவகார்த்திகேயனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடி வருகின்றனர்.