இந்த ஒன்னுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்!. மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா...

by ராம் சுதன் |

தமிழ் சினிமா ரசிகர்களிடம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் வாலி. இந்த படத்தில் அஜித்தை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். துவக்கத்தில் இப்படத்திற்கு கூட்டம் இல்லை. ஆனால், போகப்போக தியேட்டர்களில் கூட்டம் கூடியது.

அதன்பின் பின் வாலி திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. வாலி படம் ஹிட் அடிக்கவே விஜய் - ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. இரண்டு பேரிடம் உள்ள ஈகோவை மையக்கதையாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிகராக வேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் இருந்தது. தான் இயக்கிய 2 படங்களும் ஹிட் அடிக்கவே நாமே ஹீரோவாக நடித்தால் என்ன என்கிற ஆசை அவருக்கு வர அவர் இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்கள் அப்படி வெளியானது.

ஆனால், அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். பல படங்களில் நடித்தாலும் மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

அதையடுத்து, இப்போது கோலிவுட்டின் மிகவும் பிஸியான நடிகராக மாறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. எஸ்.ஜே.சூர்யாவை நடிகராக பார்ப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அவர் மீண்டும் எப்போது இயக்குனராக மாறுவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். இது பற்றி ஊடகம் ஒன்றுக்கு பதில் சொல்லி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

கில்லர் என்கிற கதையை எழுதி இயக்க திட்டமிட்டிருக்கிறேன். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பெரிய நடிகைகள் பின்னால் போக முடியாது. தில்வாலே துல்ஹானியே லீ ஜாய்ங்கே படத்தை காஜல் இல்லாமல் எடுக்க முடியாது. அதுபோல, என் கதைக்கு ஒரு கதாநாயகி தேவைப்படுகிறார். அவர் ஆக்டிவாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும். சிலரை மனதில் நினைத்திருக்கிறேன். அதில் ஒருவரை உறுதி செய்தபின் அந்த கதையை கண்டிப்பாக படமாக எடுப்பேன். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story