எஸ்கே. மேல சந்தானத்துக்கு இருந்த ஈகோ... அதான் அப்படி ஒரு மாற்றமா?

நடிகர் சந்தானம் காமெடியனா இருந்து ஹீரோவா ஆனாரு. அப்புறம் மதகஜராஜாவுக்குப் பிறகு மீண்டும் காமெடியனா நடிக்கப் போறதா சொல்றாங்க. இந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம்னு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவிடம் ஆங்கர் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
நோ பாடி லாங்குவேஜ்: காமெடி நடிகர் தான் சந்தானம். சிம்புவோடு பல படங்கள்ல நடிச்சாரு. அவருக்கு வடிவேலு மாதிரி பாடி லாங்குவேஜ் கிடையாது. அதே மாதிரி கவுண்டமணிக்கிட்டயும் பாடி லாங்குவேஜ் கிடையாது. அவர் செந்திலைப் போட்டு மிதிப்பாரு. டயலாக் அடிப்பாரு. போய்க்கிட்டே இருப்பாரு.
சந்தானம் என்னன்னா வேற மாதிரி. ஜாலியா சின்ன சின்ன டயலாக் எல்லாம் அடிச்சி ஸ்கோர் பண்ணினாரு. ஓகே ஓகே, எஸ்எம்எஸ் படங்கள்லாம் நடிச்சாரு. அப்புறம் டைரக்டர்கள்ல கண்ணன், சுந்தர்.சி. படங்கள்ல நிறைய நடிச்சாரு. அந்த நேரம் சிவகார்த்திகேயன் உள்ளே வராரு.
மெரினா: விஜய் டிவில இருந்து வந்து பாப்புலர் ஆன நடிகர்னு சந்தானத்தை சொன்னாங்க. சிவகார்த்திகேயன் மெரினா, மனம் கொத்திப் பறவை, 3ன்னு தனுஷ் படத்துல நடிச்சாரு. அப்புறம் எதிர்நீச்சல், மான் கராத்தே, டாக்டர், ரெமோன்னு பல படங்கள்ல நடிச்சாரு. அவரும் காமெடியனாகத் தான் நடிச்சாரு.
ஆனா காமெடி ஹீரோவா வந்தாரு. உடனே சந்தானத்துக்கு சிவகார்த்திகேயன் ஹீரோவா ஆகிட்டாரே. பாப்புலரா வந்துட்டாரே. நாமும் ஹீரோவா நடிக்க ஆரம்பிக்கணும். நம்ம ஏன் காமெடி நடிகனா நடிக்கணும்கற ஈகோ அவருக்கு வந்துடுச்சு. உடனே காமெடி ஹீரோவாக நடிப்பேன்னு நடிச்சாரு.
வடிவேலு வேற டைப்: இந்த ஆசை எல்லாருக்கும் வரும். யோகிபாபு மகாபிரபா நடிக்கலையா? கவுண்டமணியும் இதுக்கு முன்னாடி நடிச்சிருக்காரு. வடிவேலு வேற டைப். இம்சை அரசன் 23ம் புலிகேசி அருமையான படம். அவராலயே ஹீரோவா தாக்குப்பிடிக்க முடியல. அதே மாதிரி சந்தானமும். இவரு காமெடி நடிகரா நடிச்சிக்கிட்டே போனா மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
சில பேருக்கு தான் அமையும்: இவங்க காமெடி ஹீரோ சப்ஜெக்ட் தான் செலக்ட் பண்ண முடியும். ஆக்ஷன் படங்கள்ல நடிக்க முடியாது. ஒரே பேட்டர்ன் தான் அவங்களோட காமெடி ஹீரோ. அது போரடிக்க ஆரம்பிச்சிடும். கீர்த்தி சுரேஷ் சந்தானத்தோடு டூயட் பாடுவாங்களா? சிவகார்த்திகேயன் வளர்ந்துட்டாருன்னா அது சில பேருக்கு தான் அமையும். சூப்பர்ஸ்டார்னா ரஜினிதான். அவரு இடத்தை எல்லாரும் பிடிச்சிட முடியாது.
அமரன்: ஆரம்பத்துல நல்ல குணச்சித்திர நடிகர் அவர். அப்புறம் முரட்டுக்காளைன்னு ஆக்ஷன் படம். அப்புறம் அண்ணாமலை வரும்போது காமெடி சேர்ந்து நடிச்சி அசத்துனாரு. அந்தப் பேட்டர்ன விஜய் பிடிச்சாரு. இவங்க இரண்டு பேரையும் சேர்த்து எஸ்கே பிடிச்சிட்டாரு. அமரன் படத்துல இருந்து பெரிய ஹீரோவா பார்க்குறாங்க. பராசக்திக்குப் பிறகுதான் அவரு பெரிய ஹீரோவா தாக்குப்பிடிப்பாரான்னு தெரியும்.
அடுத்த விஜயா?: அதனால சந்தானம் எந்த காலத்திலும் சிவகார்த்திகேயனை நெருங்கவே முடியாது. காரணம் என்னன்னா எஸ்கே வேறு ஒரு உயரத்துக்குப் போயிட்டாரு. விஜய் இடத்தைக் காலி பண்ணிட்டாருன்னதும் அடுத்த விஜயான்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.