விடாமுயற்சியால் தப்பித்த ஸ்மால் பட்ஜெட் படங்கள்... அட இவ்ளோ இருக்கா?

by sankaran v |
விடாமுயற்சியால் தப்பித்த ஸ்மால் பட்ஜெட் படங்கள்... அட இவ்ளோ இருக்கா?
X

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால தமிழ்சினிமாவுல முடங்கிப் போன பல படங்கள் தொடர்ச்சியா வந்துருக்கு. இதைத் தமிழ்சினிமாவுக்கு நல்ல தொடக்கமா அமைஞ்சிருக்குன்னு எடுத்துக்கலாமான்னு ஆங்கர் கேட்க அதற்கு பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் இப்படி பதில் சொல்கிறார்.

பாசிடிவான விஷயம்: பாசிடிவ்வா பார்த்தா பாசிடிவான விஷயம் தான். விடாமுயற்சி பொங்கலுக்கு வந்தா அவங்களுக்கு நல்ல கலெக்ஷன். ஆக்சுவலா பார்த்தா அவங்கதான் விட்டுக் கொடுத்துருக்காங்க. பல படங்கள் வந்து ரிலீஸ் ஆகட்டும்னு விட்டுக்கொடுத்துட்டாங்க. உண்மை என்னன்னா அவங்களால அந்தத் தேதிக்கு வர முடியல. பல காரணங்களை ஊடகங்கள்ல சொல்லிக்கிட்டு இருக்காங்க.

அது எவ்ளோ பெனிபிட்னு பாருங்க. 6 படங்கள் தமிழ்ல வெளியாகி இருக்கு. இல்லன்னா 2 படங்கள்தான் வந்துருக்கும். அதுல 12 வருஷம் காத்திருந்த மதகஜராஜாவும் வெற்றி அடைஞ்சிருக்கு. வசூலில் 50 கோடியைத் தாண்டி இருக்கு. இது தமிழ்சினிமாவுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்துருக்கு.

விடாமுயற்சி வரலயே. நாம தெலுங்கு படமான கேம் சேஞ்சரைத் தான் நம்பணுமான்னு இருந்த ரசிகர்களுக்க நான் இருக்கேன் என்று வந்து வெற்றி வாகை சூடிய படம் மதகஜராஜா. விடாமுயற்சி படமும் ஒரு வகையில பல படங்கள் ரிலீஸ் ஆகட்டும். அவங்களும் வெற்றி பெறட்டும்னு இருந்ததுக்குக் காரணமா அமைஞ்சிருக்கு.

500 ஸ்க்ரீன்ல மதகஜராஜா: அந்த டைம்ல மதகஜராஜாவெளியானா கூட இவ்ளோ பெரிய வெற்றியை அடைஞ்சிருக்காது. ஏன்னா அந்த நேரத்துல இவ்ளோ பெரிய ரிலீஸ் கிடைச்சிருக்காது. அப்போ 150 ஸ்க்ரீன்தான் கிடைச்சிருக்கும். இப்போ 500 ஸ்க்ரீன்ல ரிலீஸ் ஆகி இருக்கு. 10 நாளுக்குள்ள இவ்ளோ பெரிய வசூல் இந்த நேரத்துல தான் கிடைச்சிருக்கு. இது அந்தக் காலத்துல என்றால் 30 நாள் ஓடுனதுக்குச் சமம்.

சந்தானம் காமெடி: கவுண்டர் கொடுக்குற காமெடியில சந்தானத்தைப் பீட் பண்ண முடியாது. பல படங்களின் வெற்றிக்கு அவர் காரணமா இருந்துருக்காரு. சந்தானம் காமெடி ரோல்களில் மட்டும் செகண்ட் ஹீரோவாக நடித்தால் பல படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம்.

பாக்கியராஜ்: சுந்தர்.சி.யின் ஸ்க்ரீன் பிளேயும், சந்தானத்தின் காமெடியும் சேர்ந்து மதகஜராஜாவை சூப்பர்ஹிட் ஆக்கியுள்ளன. இன்று போய் நாளை வா படத்தில் ஆரம்பித்து பாக்கியராஜ் 30 வருடகாலமாக நல்ல காமெடியுடன் கலந்த சிறந்த படத்தைக் கொடுத்துள்ளார். அப்படித்தான் இப்போ சுந்தர்.சியின் படங்களும் உள்ளன.

6 படங்கள்: அவரது படங்களில் வடிவேலு, யோகிபாபு, சந்தானம்னு பலருடைய காமெடிகள் அட்டகாசமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விடாமுயற்சி தள்ளிப் போனதால் தான் பொங்கலுக்கு மதகஜராஜா உள்பட காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, மெட்ராஸ்காரன், வணங்கான், கேம்சேஞ்சர் போன்ற படங்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட குடும்பஸ்தன், பாட்டல் ராதா ஆகிய படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Next Story