சூதுகவ்வும் 2 பார்க்கப் போறீங்களா? பிரபலம் சொல்ற டிப்ஸைக் கொஞ்சம் கேளுங்க...

சூது கவ்வும் படத்தைப் பார்த்துட்டு 2 படம் பார்க்க வராதீங்க. அது உங்களுக்கு ஏமாற்றம்தான் என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. இது குறித்து அவர் மேலும் என்ன சொல்கிறார்னு பாருங்க.
சூது கவ்வும் படம் விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில் முக்கியமான படம். அந்த சமயத்தில் வந்த டார்க் காமெடி படம். அந்தப் படத்தின் 2ம் பாகம் தான் சூதுகவ்வும் 2. விஜய் சேதுபதிக்குப் பதில் மிர்ச்சி சிவா வந்துருக்காரு. விஜய் சேதுபதிக்கு குரு தான் மிர்ச்சி சிவா. அவர் தற்போது ஆள் கடத்தல் வேலைகளை எல்லாம் செய்கிறார்.
டைமிங் காமெடியில் மிர்ச்சி சிவா அசத்துகிறார். அவருக்கு சரக்கு போடாம இருந்தா பாம்பு தெரியுற மாதிரி இருக்கும். படத்துல எம்எஸ்.பாஸ்கர், ராதாரவி, வாகை சந்திரசேகர் வரும் இடங்களை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணியிருக்கலாம். இன்னும் படத்தோட நீளத்தைக் குறைச்சிருக்கலாம். சூது கவ்வும் படத்தின் சாயல் பல இடங்களில் வருகிறது.
சூதுகவ்வும் படத்தோட வெற்றிக்கு என்ன காரணம்னா டார்க் காமெடியை சரியான அளவில் பயன்படுத்தி இருப்பாங்க. இதுல என்னன்னா முன்னாடி கொஞ்சம் கதை போகுது. பின்னாடி வருது.
அப்புறம் சைட்ல போகுது. எங்கேயோ வருது. அப்புறம் ஆள் கடத்துறாங்க. திடீர்னு சைகோ போலீஸைக் காட்டுறாங்க. கருணாகரனைக் காட்டுறாங்க. 6 ஆயிரம் கோடியை எப்படிங்க அந்த டிவைஸ்ல வைக்க முடியும்?
ஒயிட் ரூம்ல எல்லாரையும் கொண்டு போய் வைக்கிறாங்க. அதுல எல்லாம் ஒயிட்டா ஆகிடுறாங்க. அதை இன்னும் கொஞ்சம் டீடெயலா காட்டி இருக்கலாம். சூதுகவ்வும் படத்தை மாதிரியே இருக்கும்னு நினைச்சி படம் பார்க்க வந்தால் அவங்களுக்கு எதிர்பார்த்த மாதிரி இருக்காது.
ஆனா சூது கவ்வும் படம் ஒண்ணு எப்படி இருந்தது? 2 எப்படி இருக்கும்னு பார்க்கணும்னா படத்துக்குப் போகலாம். நிறைய இடத்துல காமெடி நல்லா வரும்னு நினைச்சி இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜூன் எழுதிருக்காரு. ஆனா அது சில இடங்கள்ல ஒர்க் அவுட் ஆகல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டியின் மூலமா நமக்கு என்ன தெரிய வருதுன்னா எந்த ஒரு படத்தையும் ரொம்ப எதிர்பார்த்துப் போகாதீங்க. அது அப்படி இருக்கும். இப்படி இருக்கும்னு. குறிப்பா 2ம் பாகத்துல வர்ற படங்களைத் தான் நாம இப்படி எதிர்பார்க்கிறோம். ஆனா தொடர்ந்து 2ம் பாகம் நமக்கு ஏமாற்றத்தைத் தான் தருகிறது. அதற்கு சூதுகவ்வும் 2 மட்டும் விதிவிலக்கல்ல.