Cinema News
கமலுடன் நடிக்க முடியாது.. எஸ்கேப் ஆன நடிகைகள்.. வாண்டடா வந்த சவுந்தர்யா!…
Kamalhassan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசனின் ஒரு படத்தில் நடிகைகள் எல்லாம் விலக தானாக முன் வந்து சவுந்தர்யா நடித்தது குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே ஒரு விதத்தில் ஒவ்வொரு ரசிகர் கூட்டத்துக்கும் பிடித்தமானதாகவே இருக்கும். ஆனால் அவரின் காமெடி படங்கள் இன்று வரை எல்லா ரசிகர்களால் ரசிக்கும் படியாக அமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு படம் தான் காதலா காதலா. ஆஸ்தான இயக்குநரான சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய இந்த படத்திற்கு கதையை கிரேஸி மோகன் எழுத திரைக்கதையை எழுதினார் நம் விண்வெளி நாயகன் கமல்ஹாசன்.

ஆனால் இப்படம் அப்போது நடந்த ஃபெஃப்சி நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தால் தொடர்ந்து தள்ளிப்போனது. ஒரு கட்டத்தில் படக்குழுவில் நிறைய மாற்றமும் நடந்தது. அவ்வை சண்முகி வெற்றியை தொடர்ந்து இந்தப்படத்தை இயக்க இருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
அவரும் “ஃபெப்சி” வேலை நிறுத்தம் காரணமாக வெளியேறினார். அதுபோலவே, இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் மீனா மற்றும் சிம்ரன். ஆனால் அவர்களும் வேலை நிறுத்தம் காரணமாக நடிக்க மறுத்துவிட்டனர். இதில் முதலில் ரம்பா ஒப்பந்தமாக “ஜானகிராமன்” படத்தில் வந்த கருத்து வேறுபாட்டால் அவருடன் இணைந்து நடிக்க நக்மா மறுத்து விட்டார்.
அந்த ரோலில் கமலுக்கு ஜோடியாக தானாக வந்து ஒப்புக்கொண்டார் சவுந்தர்யா. இந்த இணை இணைந்து நடித்த முதல் படம் இதுதான். அவரின் இறப்புக்கு பின்னர் சவுந்தர்யா தன் படத்துக்கு ஒப்புக்கொண்ட விஷயத்தை சொல்லி அவருக்கு அஞ்சலி செலுத்தி இருப்பார் கமல்ஹாசன்.
அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் மற்றும் வடிவேலு கூட்டணியில் 3 படங்கள் மட்டுமே உருவாகி இருக்கிறது. அதில் இவர்கள் கடைசியாக நடித்த படமும் காதலா காதலா மட்டுமே. தொடர்ந்து இப்படத்தில் தான் சோ கடைசியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.