விஜயகாந்த் பைட்ல அதை எப்படித்தான் பண்றாரோ தெரியல... நானே விழுந்துடுவேன்..! வியக்கும் ஸ்டண்ட்மேன்
நடிகரும், ஸ்டண்ட்மேனுமான அழகு ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன் என பலரது படங்களிலும் பணியாற்றியுள்ளார். அப்போது நடந்த சுவையான சம்பவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் விவரிக்கிறார். என்ன சொல்றாருன்னு பார்ப்போமா...
ரஜினிகாந்தைப் பொருத்தவரை அவர் நாம சொல்ற மாதிரி செய்ய மாட்டாரு. நாம ஒண்ணு சொன்னா அவரு ஒண்ணு பண்றாருங்கற மாதிரி இருக்கும். ஆனா அவரோட ஸ்டைலே நம்மை மிரட்டிடும் என்கிறார்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் பைட் பண்ணும்போது நான் சுவரில் ஒரு இடத்தில் காலால் எட்டித் தொட்டுவிட்டு கீழே விழுவேன். பைட் முடிந்ததும் என்னைப் பார்த்து நான் கால் வைத்த இடத்தை சுவரில் தொட்டுப் பார்த்து 'என்ன உயரம்'னு பாராட்டினார்.
அந்த மாதிரி யாரா இருந்தாலும் அவர் உடனே பாராட்டிடுவாரு என்கிறார். அதே போல கமலுடன் பைட் பண்ணின அனுபவம்னு கேட்டா எனக்குள் ஒருவன் படத்தில ஒரு ஜன்னல்ல கண்ணாடியை உடைச்சிக்கிட்டு வந்து கீழே விழுவேன்.
அப்போ என் காலில் ஒரு கண்ணாடி குத்தியதைப் பார்த்துவிட்டார். அப்போ அவருக்கு ஷாட் கிடையாது. உடனே பர்ஸ்ட் ப்ளோர்ல இருந்து ஜம்ப் பண்ணி கீழே குதித்து என் காலில் இருந்து வந்த ரத்தத்தைப் பார்த்ததும் எல்லாரையும் வரவழைத்து சிகிச்சை அளிக்கச் செய்தார். அதே மாதிரி அர்ஜூனுடன் பைட் பண்றது ரொம்ப சௌகரியமா இருக்கும். அவருக்கும் கராத்தே, பைட் எல்லாம் முறைப்படி தெரியும்.
விஜயகாந்தைப் பற்றிக் கேட்டதும், நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க. அவர் எதையும் முறையாகக் கத்துக்கல. எல்லாம் இங்க சினிமாவுல வந்து நாங்க பண்றதைப் பார்த்தேக் கத்துக்கிட்டாரு. விஜயகாந்த் காலை சுவற்றில் மிதித்து திருப்பி அடிக்கிறதுல வல்லவர்.
அவர் அதை எப்படித்தான் பண்றாருன்னு தெரியாது. நான்லாம் கூட முடியாது. சுவத்துல காலை வச்சி திரும்பி வந்து அடிப்பாரு. சுவத்துல காலை வச்சித் திரும்பினா விழுந்துடுவோம். அது எப்படித்தான் பண்றாருன்னு தெரியல. அடிச்சிட்டு வந்து அப்படியே நிப்பாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். செந்தூரப்பூவே படத்தில் வரும் டிரெய்ன் பைட் ரொம்பவே மாஸாக இருக்கும் என்கிறார். அது இவருக்கு லண்டன் சென்ற போது கூட புகழைச் சேர்த்ததாம்.