லைக்காவை காப்பாத்துமானு தெரியல.. ஆனா கமெர்ஷியலா ஹிட்டாகும்! விடாமுயற்சி குறித்து பிரபலம் தகவல்
லைக்காவிற்கு அடுத்தடுத்து பெரும் அடிதான் விழுந்து கொண்டிருக்கின்றன. சந்திரமுகி 2, இந்தியன் 2, லால் சலாம் என பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் பெரும் நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில் எல்லா படங்களுமே கமெர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்தன.
இப்போது அடுத்ததாக வேட்டையன் திரைப்படம், விடாமுயற்சி திரைப்படம்தான் பெரும் நம்பிக்கையில் இருக்கிறது. இப்படி லைக்காவிற்கு பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களை தயாரித்ததுதான் என வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.
சாதாரணமாக ஒரு படத்திற்கு 10 லட்சம் வரை செலவாகிறது. இதுவே பெரிய நடிகர்கள் நடிக்கும் பட்சத்தில் 40 லட்சம் வரை செலாகிறது. விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாளைக்கு 50 லட்சம் வரை செலவானதாக செய்திகள் வெளியானது.
இப்படி இருக்கும் போது பல படங்களை தயாரிக்கும் நிலையில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் செலவாகுவதாக பிஸ்மி தெரிவித்தார்.
ஆனால் விடாமுயற்சி படம் லைக்காவை காப்பாற்றுமா என சொல்ல முடியாது. கண்டிப்பாக கமெர்ஷியல் ரீதியாக ஹிட்டடிக்கும் என பிஸ்மி கூறியிருக்கிறார். ஏனெனில் பிரேக் ரவுன் என்ற படத்தின் தழுவலோ அல்லது ரீமேக்கோ என்று சொல்கிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் படம் தரமாக இருக்கும். ஆனால் எந்தவித ரிசல்ட்டை கொடுக்க போகிறது என்பதை ரிலீஸ் சமயத்தில்தான் சொல்ல முடியும் என்றும் பிஸ்மி கூறினார்.
அனைவர் எதிர்பார்ப்பும் இதுதான். ஒரு வேளை லைக்காவை பொருளாதார நெருக்கடியில் இருந்து விடாமுயற்சி காப்பாற்றுமேயானால் அஜித்தை கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தையும் லைக்காதான் தயாரிக்கிறது. இப்படி அகல கால் வைத்தால் திண்டாட்டம்தான் என்றும் பிஸ்மி கூறினார்.