சூர்யா தவறவிட்ட சூப்பர்ஹிட் திரைப்படங்கள்… இதலாம் பண்ணிருந்தா அவர்தான் இப்போ டாப்பு!
Suriya: பிரபல நடிகர் சூர்யாவின் நடிப்பில் சூப்பர்ஹிட் அடித்த திரைப்படங்கள் ஒரு கணக்கு என்றாலும் அவர் தவறவிட்ட சூப்பர்ஹிட் திரைப்படங்களின் பட்டியல் தான் அதிகம் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது.
மாதவன் நடிப்பில் சூப்பர்ஹிட் அடித்த இப்படம் முதலில் சூர்யாவிடம் தான் சென்றது. ஆனால் நடிகர் சிவகுமாரால் அப்படத்தினை தவறவிட்டால். அதை தொடர்ந்து அப்படத்தில் மாதவன் நடித்தார்.
அதை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. டேனியல் பாலாஜி மற்றும் அசின் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த போஸ்டர்களும் வெளியானது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர் இக்கூட்டணி வாரணம் ஆயிரம் படத்தில் இணைந்தது.
தொடர்ந்து, கௌதம் இயக்கத்தில் துப்பறியும் ஆனந்தன் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளிவந்தது. ஆனால் அப்படமும் பல காரணங்களால் நடக்காமல் போனது.
2003ம் ஆண்டு ஜனநாதனின் இயற்கை படத்தில் சூர்யாவுக்கு தான் வாய்ப்பு வந்தது. ஆனால் காதல் படம் வேண்டாம் எனக் கூறி அதை மறுத்துவிட்டார். பின்னர் அப்படம் ஷாமின் நடிப்பில் வெளிவந்தது.
2013ம் ஆண்டில் சூர்யாவை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் துருவ நட்சத்திரம். அப்படம் தொடர்ந்து தள்ளிப்போய் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு அப்படத்தின் ஹீரோவாக விக்ரம் ஒப்பந்தமாக ஷூட்டிங் முடிந்தும் இன்னும் பெட்டியில் இருக்கிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தான் முதலில் சார்பேட்டா பரம்பரை படத்தினை எடுக்க முடிவெடுக்கப்பட்டதாம். சூர்யா பாக்ஸிங் பயிற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் நடக்காமல் போகவே அந்த இடத்தில் ஆர்யா நடித்து இருந்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி படத்தின் கதையை சூர்யாவுக்கும் சொல்லி இருக்கிறார். ஆனால் சூர்யா அந்த படத்திற்கு நோ சொல்லிவிட்டார். பாகுபலி படத்தில் ஒரு கேரக்டரை சூர்யாவுக்கு சொன்னாராம் ராஜமெளலி. ஆனால் பிடிக்கவில்லை எனக் கூறி சூர்யா அதை மறுத்து இருக்கிறார்.
பையா படத்தின் கதையை சூர்யாவுக்கு தான் முதலில் லிங்குசாமி சொல்ல அதற்கும் நோ சொல்லிவிட்டாராம் சூர்யா. மலையாளத்தில் சூப்பர்ஹிட் அடித்த ஆடுஜீவிதம் படத்தின் கதை சூர்யாவுக்கு சொல்லப்பட்டதாம். மற்ற வேலைகளால் இப்படத்தில் சூர்யாவால் நடிக்க முடியாமல் போனது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படம் பூஜையுடன் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா லாக்டவுனால் அப்படம் நிறுத்தப்பட்டது. நண்பன் படத்தில் சூர்யாவை நடிக்க கேட்ட போதும் ரீமேக்கில் நடிக்க முடியாது என ஒதுங்கிவிட்டாராம்.
இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ரிலீஸான வணங்கான், தயாராகி வரும் பராசக்தி என சூர்யாவின் காஸ்ட்லி மிஸ் படங்களே அவரின் கேரியர் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.