Kanguva: இது யாரு கிளப்பிவிட்டது!.. கங்குவா படத்தில் சூர்யா போலீஸா..? புது ட்விஸ்ட்டா இருக்கே..!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகத்தையும் இயக்குனர் சிறுத்தை சிவா மொத்தமாக எடுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழுவினர் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திரைப்படம் 30க்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
தற்போதே இந்த திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் சூர்யா நடிப்பில் 2 வருடங்களாக ஒரு திரைப்படம் கூட வெளியாகாத காரணத்தால் அவரது ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த அளவில் எதிர்பார்ப்பு காத்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை கங்குவா திரைப்படம் பூர்த்தி செய்யும் என்று தெரிகின்றது.
இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் நடிகர் சூர்யாவும் தமிழ்நாடு, பெங்களூர், ஆந்திரா, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
இது தொடர்பான வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது. சூர்யா கங்குவா திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கங்குவா திரைப்படம் ஒரு பீரியட் படம். இந்த திரைப்படத்தில் பீரியட் படத்தின் காட்சிகள் அதிக அளவிலும், நிகழ்கால காட்சிகள் 20 நிமிடம் மட்டும் இருக்கும் என்று படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிகழ்காலத்தில் வரும் காட்சிகளில் சூர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆனால் ட்ரெய்லரில் பார்த்தவரையில் நிகழ்காலத்தில் வரும் சூர்யா ஒரு ஜாலியான கதாபாத்திரமாக காட்டி இருந்தார்கள். அப்படி இருக்கையில் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இருப்பினும் ரசிகர்கள் கங்குவா படத்தில் சூர்யா மீண்டும் போலீஸ்-ஆக நடித்துள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் அது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.