சூர்யாவுக்கு இப்படி ஒரு தங்கமான மனசா? இவரையா கலாய்ச்சிட்டு இருக்கீங்க!

by ராம் சுதன் |

Surya: நடிகர் சூர்யாவின் சமீபத்திய பேச்சு வைரலாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அடடா இவரா போய் கலாய்க்கிறோமே என்னும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தவர் சூர்யா. ஒரு கட்டத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது. ஆனால் அதை தக்க வைக்காமல் நடிகர் சூர்யாவுக்கு பாலிவுட் ஆசை வந்தது. இதனால் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆனார்.

அதை தொடர்ந்து, அங்கு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கர்ணன் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. பாலிவுட் பட வாய்ப்புக்காக கோலிவுட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார். இதனால் 3 வருடம் கழித்து ரிலீஸான கங்குவா பெரிய அளவில் விமர்சனம் குவித்தது.

படத்தின் தோல்வி சூர்யாவுக்கு பாலிவுட் வாய்ப்பை இழக்கவும் செய்தது. இதை தொடர்ந்து சூர்யா தற்போது தமிழில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார். அதன்பேரில் தற்போது ரெட்ரோ உள்ளிட்ட படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பு மட்டுமல்லாமல் அகரம் என்னும் அமைப்பை நிருவி அதன்மூலம் முடியாத குழந்தைகளின் கல்விக்கு உதவியும் செய்து வருகிறார். அந்த வகையில் அகரம் அமைப்பின் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதுகுறித்தான நிகழ்ச்சியில் சூர்யா கலந்துக்கொண்டு பேசினார்.

இந்த கட்டிடம் யார் கொடுத்த நன்கொடையிலும் கட்டப்படவில்லை. எனக்கு மக்கள் கொடுத்த ஆதரவின் மூலம் கிடைத்த சினிமா வாய்ப்பின் சம்பளத்தால் மட்டுமே கட்டப்பட்டு இருப்பதாக பேசி இருக்கிறார். சூர்யாவின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

Next Story