Kanguva: சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் 'பீஸ்ட்'
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் கங்குவா. இதில் சூர்யா பழங்கால நூற்றாண்டு மற்றும் தற்போதைய லேட்டஸ்ட் வெர்ஷன் என இருவேறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளார்.
சூர்யாவின் திரை வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். அதோடு இப்படம் மிக அதிக மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
சூர்யாவின் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகி விட்டதால் அவரின் ரசிகர்கள் கங்குவா அப்டேட்டினை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் போஸ்டர்கள் ஆகியவை படத்தின் மீது பிறமொழி ரசிகர்களுக்கும் கூட பெரும் ஆர்வத்தை உண்டு பண்ணியுள்ளன.
இந்தநிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்கு சூப்பரான விருந்து ஒன்றினை அளிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23-ம் தேதி படக்குழு வெளியிடவிருக்கிறது.
இந்த தகவலை படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். லேட்டஸ்ட் தகவலின்படி கங்குவா மொத்தமாக ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் வில்லனாக உதிரன் என்ற கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்திருக்கிறார். படத்தில் சூர்யாவிற்கு இணையாக அவருக்கும் காட்சிகள் உள்ளன. அதோடு இதில் திஷா பதானியும் போர் வீராங்கனையாக நடித்திருக்கிறார். படம் வருகின்ற அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.