சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ. அந்த படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை .அதற்கு முன்னதாக வெளியான கங்குவா திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த இரு படங்களாலும் சூர்யாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அவர் ஒரு பெரிய ஹிட்டை கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அவருடைய எந்த படங்களும் ஹிட் கொடுக்காத நிலையில் கதை தேர்வில் அவர் தவறு ஏதும் செய்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு திறமை மிக்க ஆற்றல்மிக்க நடிகர் சூர்யா. சினிமாவையும் தாண்டி பொது சேவையில் தன்னுடைய பங்கை எப்பொழுதும் கொடுத்து கொண்டிருப்பவர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியை வழங்கி இன்று அவர்களின் நல் வாழ்விற்கு உதவியாக இருந்து வருகிறார் .
இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர்களுடைய படங்களால் அவரை தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே ட்ரோலுக்கு பேர் போன திரைப்படம் அஞ்சான். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது .லிங்குசாமி இந்த படத்தை இயக்கியிருந்தார் .திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி தான் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் அமைந்த பாடல்கள் நல்ல ஒரு வெற்றியை பெற்றன. ஆனால் படம் மக்களை கவரவில்லை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லிங்குசாமி பேசியது மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. கங்குவா திரைப்படத்திற்கு எப்படி ஒரு பெரிய ஹைப்பை கொடுத்தார்களோ அப்படி லிங்குசாமியும் இந்த படத்திற்கு பெரிய அளவில் பில்டப் செய்திருந்தார்.
anjan
ஆனால் அந்த அளவு படத்தில் ஒன்றும் இல்லை என படம் வெளியானதும் லிங்குசாமியையும் சூர்யாவையும் நெட்டிசன்கள் வச்சு செய்தனர். இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீ எடிட் செய்து வெளியிட்டிருந்தார்கள் .இது youtubeல் நல்ல ஒரு வெற்றியை பெற்றது. அதை பார்க்கும் பொழுது நமக்கு ஏன் இந்த ஐடியா தோன்றவில்லை எனை நினைத்து நானும் ரீ எடிட் செய்த அந்த காப்பியை மீண்டும் தமிழில் ரீ ரிலீஸ் பண்ண போகிறேன். அதற்கான வேலைகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன என லிங்குசாமி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…