விஜய் படத்தில் நடிக்க இருக்கும் தெலுங்கு நடிகர்.. சிவராஜ் இல்லையா இந்த நடிகராம்?..

Actor Vijay: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும். இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு இவரை வைத்து படம் இயக்குவதற்கு முன் வருவார்கள். இப்படி லைம் லைட்டில் இருந்து வரும் விஜய் திடீரென்று சினிமாவை விட்டு விலகி அரசியலில் கால் பதித்திருக்கிறார்.
அரசியல் பயணம்: கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். இந்த கட்சியை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல், மாநாடு அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து முடித்தார். தற்போது அரசியல் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார்.
கடைசி திரைப்படம்: நடிகர் விஜய் தற்போது இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். என்னதான் அரசியல் வேலைகளில் நடிகர் விஜய் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் தனது படப்பிடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார். இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
தெலுங்கு நடிகர்: இந்த திரைப்படத்தில் ஏற்கனவே ஏராளமான பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஒரு நடிகரை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் பிற மொழியில் இருந்து ஒரு பிரபலத்தை இறக்குவதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். அதிலும் கொஞ்சம் சீனியர் நடிகராக இருந்தால் சரியாக இருக்கும் என்பதால் நடிகர் சிவராஜை அணுகி இருக்கிறார்கள்.
ஆனால் அவர் தற்போது ஓய்வில் இருப்பதால் தெலுங்கு சினிமாவில் இருந்து ஒரு நடிகரை இறக்குவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். சீனியர் நடிகர் என்றால் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்ற நடிகர்கள் தான். ஆனால் தற்போது அவர்கள் அனைவருமே பிஸியாக இருந்து வருகிறார்கள். இதனால் ஜெகபதிபாபு, சுனில், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.