Thalapathy 70: இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே பாஸ்!

by ராம் சுதன் |

தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் தமிழின் முன்னணி நடிகருமான தளபதி விஜய் தன்னுடைய 69-வது படம் தான் கடைசி படமாக இருக்கும் என்று அறிவித்தார். ஆனால் அடுத்ததாக அவர் தனது 7௦-வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தளபதி 69 படம் குறித்தே இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் 7௦-வது படத்தின் இயக்குநர் மற்றும் கதையாசிரியர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. கடைசியாக ஹெச்.வினோத் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டாலும் அதுகுறித்து தொடர்ந்து விஜய் மவுனம் சாதித்து வருகிறார்.

இதற்கிடையில் விஜயின் பேவரைட் இயக்குநர் அட்லி அவரின் 7௦-வது படத்தினை இயக்க இருப்பதாகவும், விஜயேந்திர பிரசாத் இதற்கு கதை எழுதுவதாகவும் கூறப்படுகிறது. போனசாக இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து அட்லி-விஜய் கூட்டணி வெற்றிகளை குவித்திருப்பதால் இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது. என்றாலும் மறுபுறம் 69-வது படம் தான் தளபதியின் கடைசி படமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர்.

69-வது படம் தான் கடைசி படம் என விஜய் உறுதியுடன் இருந்தால் அட்லியே அப்படத்தை இயக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எது எப்படியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை நாம் காத்திருக்கத் தான் வேண்டும்.

Next Story