Thalapathy69: விஜய் போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்… தளபதி69ல் ரிலீஸ் பிளான்… ஒரு வேளை இருக்குமோ?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:17  )

Thalapathy69: தளபதி விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாக்கி வரும் தளபதி 69 திரைப்படம் சுவாரஸ்ய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தன்னுடைய சினிமா கேரியரில் கடைசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துக் கொண்ட கையோடு அரசியல் வாழ்க்கையில் முழு கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைக்கப்பட்ட இக்கட்சியின் முதல் மாநில மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மாநாட்டில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

முதல் அடியே விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருப்பதால் அவர் அரசியலில் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க முடிவு எடுத்து இருக்கிறார். இதற்கு முதலில் அவர் தளபதி 69 திரைப்படத்தை முடிக்க வேண்டும். அதற்காக படத்தின் ஷூட்டிங்கை படக்குழு துரிதப்படுத்தி இருக்கிறது.

முதல் ஷெட்யூல் முடிந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையின் முக்கிய இடத்தில் இன்று தொடங்கி இருக்கிறது. அடுத்த சில தினங்கள் இங்கு நடக்கும் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே முக்கிய பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு விட்டது. விஜய் இப்படத்தை அடுத்த ஆண்டு முதல் பாதிக்குள் முடித்து விட வேண்டும் என ஹெச்.வினோத்துக்கு கண்டிஷன் போட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 69 திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகும் என தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

Next Story