அவன் தேர்ந்தெடுத்ததுதானே! என்னத்த சொல்ல? மருமகள் பற்றி தம்பிராமையா வச்ச டிவிஸ்ட்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:33  )

தமிழ் சினிமாவின் தனது நடிப்பில் மிகப்பெரிய ஆற்றல் படைத்த நடிகர்கள் என குறிப்பிட்ட சில பேரை மட்டும் தான் சொல்ல முடியும். அதில் முக்கியமான நடிகராக கருதப்படுபவர் நடிகர் தம்பி ராமையா .நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.

வடிவேலுவின் சில படங்களுக்கு இவர் டயலாக் எழுதியும் கொடுத்திருக்கிறார்.இவர் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் தனது மருமகள் ஐஸ்வர்யாவை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தம்பி ராமையாவுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

மகள் ஸ்வீடனில் படித்து முடித்துவிட்டு தற்போது திருமணமாகி குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கிறார். மகன் உமாபதி அவரும் ஒரு நடிகர். அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கரம் பிடித்தவர். இவர்களுடைய திருமணம் சில மாதங்களுக்கு முன்பு தான் நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்திற்கு முதலில் உமாபதியின் தாய் சம்மதிக்கவில்லையாம். ஏனெனில் கிராமத்தில் இருந்து வந்தவர் என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் மறுத்திருக்கிறார். அதன் பிறகு தம்பி ராமையா தான் அவரை சம்மதிக்க வைத்தாராம். மகளுக்கு நாங்கள் தேடிக் கொடுத்த கணவர் ,மகன் அவனே தேடிக்கொண்ட மனைவி எங்களுக்கு மருமகள். இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என கூறினார் தம்பி ராமையா.

தம்பி ராமையாவை பொறுத்தவரைக்கும் ஆரம்பத்தில் கதை எழுதும் போதும் சில காமெடி டிராக்குகளை எழுதும் போதும் முதலில் என் மகளை வைத்து தான் நான் செக் பண்ணுவேன் எனக் கூறியிருக்கிறார். ஒரு வசனத்தை சொல்லும்போது அவள் சிரித்துவிட்டால் என்றால் அந்த காமெடி ஒர்க் அவுட் ஆகும் என எனக்கு தெரிந்து விடும்.

ஆனால் அவளுக்கு திருமணம் என முடிவானதும் ஒவ்வொரு நாளையும் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து விடுவாளே என எண்ணி எண்ணி அவள் திருமண நிகழ்வில் நான் முகம் சோர்வுற்றுதான் இருந்தேன். அதனால் தான் மகள் மீது தந்தைக்கு எப்போதுமே பாசம் அதிகமாக இருக்கும் என கூறினார்.

சரி மருமகள் எப்படி இருக்கிறார் என தொகுப்பாளினி கேட்டபோது அதற்கு தம்பி ராமையா பாப்பா நல்லா தான் இருக்கு. ஆனால் எல்லாரும் சொல்லுவாங்க. புது மருமக தானே ஒரு ஆறு மாசம் கழிச்சு சொல்லுன்னு கிண்டல் பண்ணுவாங்க. ஏனெனில் அவனே தேர்ந்தெடுத்த வாழ்க்கை தானே.

ஆனால் எனக்கு கிடைத்த மனிதர் ஒரு அற்புதமான மனிதர். தேசபக்தர் மிக்கவர். ஆன்மீக பக்தர். உடல் ரீதியாக தன்னை கட்டுக்கோப்பாக ஒழுக்கமாக வைத்திருப்பவர். அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என அர்ஜுனை பற்றி கூறி பெருமையாக பேசி இருந்தார் தம்பி ராமையா.

Next Story