விஜயின் நிறைவேறாத ஆசை என்னன்னு தெரியுமா? பிரபல நடிகர் சொல்றதைக் கேளுங்க...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:38  )

நடிகர் விஜய் தற்போது அரசியல், சினிமா என இரு விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அரசியல் மாநாட்டை அனைவரும் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அசத்தி விட்டார். தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன.

இப்போது மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் போல வாழ்த்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார். நேற்று தீபாவளிக்கு வாழ்த்து சொன்னார். இன்று தமிழ்நாடு தினத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

விஜயின் படங்கள் எல்லாவற்றிலும் ஒரு சென்டிமென்ட், ஒரு குத்துப்பாட்டு, காமெடி, பைட்னு எல்லாவற்றையும் கரெக்டான விகிதங்களில் கலந்து சூப்பரான மசாலாவாகக் கொடுத்திருப்பார்கள்.

அந்த வகையில் ரஜினிக்கு அடுத்தபடியாக ஏராளமான ரசிகர்கள் ரசித்துப் பார்த்தது விஜயின் படங்களைத் தான் என்று சொல்லலாம். கலெக்ஷனையும் குவிக்கிறது. ரஜினிக்கு இணையாக அதிக சம்பளத்தையும் வாங்கியுள்ளார்.

கடைசியாக தனது படத்துக்கு 200 கோடி வரை சம்பளம் பெற்ற இவர் அனைத்தையும் விட்டு விட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறேன் என்று முன்வந்தது பாராட்டுக்குரிய விஷயம்தான்.

இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமாக தளபதி 69ல் நடித்து வருகிறார். அந்தவகையில் விஜய் அடுத்து அரசியலில் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார் என்பதை அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது பிரபல நடிகர் சதீஷ் விஜய் குறித்து ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அது இதுதான்...

விஜய் சார்கிட்ட ஒரு தடவை நான் கேட்டேன். 'ரஜினி சார் படத்துல எந்தப் படத்தை ரீமேக் பண்ணுவீங்க?'ன்னு. அதுக்கு அவர் பாட்ஷாவைத் தான் சொல்லப் போறாருன்னு நினைச்சேன். ஆனா அவர் 'அண்ணாமலை'ன்னு சொல்லிட்டாரு. ஏன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்ன பதில் இதுதான். 'ஒரு தங்கச்சி, அம்மா, ஒரு சாதாரண மனுஷன் எப்படி ஜெயிக்கிறான்னு இருக்கும். அதனால எனக்கு அது சூட் ஆகும்னு நினைக்கிறேன்'னு சொன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story