விஜயை வம்புக்கு இழுக்கும் இயக்குனர்... அப்படி என்னதான் சொன்னார்?

நடிகர் விஜய் பற்றி இயக்குனர் ஒருவர் வம்புக்கு இழுப்பது போல சில விஷயங்களைத் தெரிவித்துள்ளார். அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார்? வாங்க பார்க்கலாம்.
சுசீந்திரன்: இயக்குனர் சுசீந்திரன் ஒரு பன்முகக் கலைஞர். பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என்று பன்முகத்திறன்களைக் கொண்டவர். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கியதில் பாயும்புலி, பாண்டிய நாடு, வெண்ணிலா கபடி குழு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கடைசியாக 2021ல் ஈஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார்.
10 படங்கள் பிளாப்: வெற்றியை மட்டுமே பார்த்த எனக்கு தோல்வியையும் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் தொடர்ந்து 10 படங்கள் பிளாப் ஆகும்னு எதிர்பார்க்கல என்று இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இப்போது இவர் ஒரு இயக்குனரின் சவால்னா என்னன்னு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
நான் வந்து கடைசியா பாயும்புலிக்கு அப்புறம் பெரிய ஹிட் கொடுக்கல. அதை நான் வெளிப்படையா சொல்றேன். ஆனா இன்னைக்கு நான் ஜீவா படம் பண்ணினேன்னா அது 100 கோடி ரூபாய்க்கு வசூல் பண்ணிருக்கும். அன்னைக்கு கிரிக்கெட்டுக்கு இருந்த ரீச் வேற. இன்னைக்கு இருக்கக்கூடிய ரீச் வேற.
விஜயை வச்சி படம்: நான் இப்ப சொல்றேன். 5 கோடிக்கு படம் பண்ணி நீங்க சொல்ற 500 கோடிக்கு வசூல் பண்ற அளவுக்கு என்னால படம் பண்ண முடியும். எனக்கு அதுக்கு கதை கிடைக்கணும். அவ்வளவுதான். அதை என்னால ஸ்கிரீன்ல கொண்டு வர முடியும். இங்கே எல்லாமே ஸ்கிரிப்ட்தான். விஜயை வச்சி 300 கோடி ரூபாய்க்கு படம் பண்ணிட்டு 500 கோடி ரூபாய் கலெக்ட் பண்றது பெரிய விஷயம் அல்ல.
5 கோடி ரூபாய்க்கு கலெக்ட் பண்ணிட்டு 500 கோடி ரூபாய் கலெக்ட் பண்றதுதான் மேட்டர். அங்க தான் டைரக்டர் நிக்கிறான். அதனால அந்த முயற்சியை நான் திரும்ப திரும்ப பண்ணிக்கிட்டு இருக்கேன். 5 கோடிக்கு படம் பண்ணி 100 கோடி ரூபாய்க்கு வசூல் பண்ணிக் காமிக்கணும்.
டைரக்டருக்கு சவால்: அதுதான் ஒரு டைரக்டருக்கு இருக்கக்கூடிய சவால் என்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இவர் சொல்வதைப் பார்த்தால் விஜயையும் அவரது படங்களை இயக்கும் இயக்குனர்களையும் வம்புக்கு இழுக்கிறாரோ என்றே தோன்றுகிறது. விஜய்க்கு இருக்கும் மார்க்கெட்டில் அவருக்கு அதுபோன்ற பெரிய பட்ஜெட் படங்கள்தான் பொருத்தமாக இருக்கும்.
சின்ன பட்ஜெட்: ஆனால் இயக்குனர் சுசீந்திரன் அவரை சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்கச் சொல்கிறாரா என்றும் சந்தேகம் எழுகிறது. அவர் சொன்னபடி 5கோடி பட்ஜெட்டில் 100 கோடியை வசூலித்துக் காட்டினால் அது அவரது திறமைதான். அது ஒருவகையில் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயமும்கூட.
பல சின்ன பட்ஜெட் படங்களும் வர வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ற நடிகர்கள் அந்த வகையில் எப்பவுமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இதில் மற்றவர்களை சுட்டிக் காட்டி ஒப்பிடுவது சரியானதல்ல என்றே நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.