Vijay TVK:
கடந்த 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பாக தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் சுற்றுப்பயணமாக தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பிரச்சாரக் கூட்டத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக 40லிருந்து 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
அந்தக் கூட்டத்திற்கு தவெக கட்சியின் சார்பாக 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லியே அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கும் மேலாக மக்கள் கூட்டம் அலைமோதியது .இதனால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட பலர் உயிரிழந்தனர் .இன்னும் சில பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இந்த ஒரு சம்பவம் தமிழ்நாட்டையே ஒட்டுமொத்தமாக சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.
அன்று இரவே விஜய் சென்னை திரும்பினார். பல அரசியல் கட்சி தலைவர்கள் கரூருக்கு சென்று காயமடைந்தவர்கள் குடும்பத்தாரையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்து தங்களது ஆறுதல்களை கூறி வந்தனர். இது விஜய்க்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அவர் அரசியலில் முழுமூச்சாக இறங்கி விட்ட நிலையில் இது அவருக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டிருப்பதாகவும் இதற்குப் பின்னணியில் சதி இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தவெக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உயர்நீதிமன்றத்திற்கு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், குறிப்பிட்ட இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தொலைபேசி துண்டிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
அது மட்டும் அல்ல இது ஒரு திட்டமிட்ட அரசாங்கம் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் செயல் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். மேலும் கூட்டம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல இந்த சம்பவத்தை சிபிஐக்கு விசாரணையாக மாற்ற வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் மதுரை உயர்நீதிமன்றம் இந்த மனுவை இன்று ஏற்க மறுத்து இருக்கிறது. ஏனெனில் கடந்த சனிக்கிழமையில் இருந்து தொடர்ந்து தசரா விடுமுறை என்பதனால் இன்று அந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நாளை மீண்டும் மனுவை கோரலாம் என்றும் கூறி இருக்கிறது. இந்த தசரா விடுமுறை நாட்களில் வெள்ளிக்கிழமை மட்டும் உயர் நீதிமன்றம் இயங்கும் என்பதனால் அதற்கான மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடிய நாளாக செவ்வாய்க்கிழமை இருப்பதனாலயே நாளை மீண்டும் மனுவை கோரலாம் என கூறப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் ஆதவ் அர்ஜுனா தரப்பிலிருந்து இது ஒரு அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்யப் போவதாக ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர் கூறியிருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் வெள்ளிக்கிழமைதான் இந்த மனு நீதிமன்றத்திற்கு வரும். இதற்கிடையில் விஜய் சனிக்கிழமையில் இருந்து தன்னுடைய நீலாங்கரை வீட்டில்தான் இருந்தார். இன்று காலைதான் எம்சி நகரில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை பார்க்க காவலர்கள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
