தனுஷுக்கு ஒரு இமேஜ் இருக்கு! இதெல்லாம் தேவையில்லாத வேலை!.. களத்தில் இறங்கிய பிரபலம்!..
தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். நாளுக்கு நாள் தனுஷ் மீது இருக்கும் கிரேஸ் அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றது. அந்தளவுக்கு தன் படங்களின் மூலம் தன்னுடைய மார்கெட்டை உயர்த்திக் கொண்டே செல்கிறார் தனுஷ். சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதுவும் அவருடைய 50வது படம் எனும் போது திரையுலகில் தனுஷ் மீது மிகப்பெரிய அளவில் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் தோற்றமும் அவர் பழகும் விதமும் வாழ்க்கையில் நன்கு பக்குவப்பட்ட ஒரு நபர் நடந்து கொள்வதுமாதிரியே தான் தெரிகிறது.
மேலும் ரசிகர்களுக்கான அறிவுரைகளையும் ஒவ்வொரு மேடையின் போதும் கூறி வருகிறார் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து புகார் ஒன்று வந்திருக்கிறது. அதோடு அவர் மேல் ரெட் கார்டு வரை அந்த புகார் சென்றிருக்கிறது.
இதை பற்றி சமீபத்தில் பெப்சி தலைவரும் இயக்குனருமான செல்வமணி கூறும் போது தனுஷ் மீது இந்த நடவடிக்கை எடுத்தது கொஞ்சம் அதிருப்தியைத்தான் தந்திருக்கிறது என்று கூறியிருந்தார். ஏனெனில் தயாரிப்பாளர் சங்கம் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக முடிவை எடுத்திருப்பது எனக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என செல்வமணி கூறினார்.
அல்லது சம்பந்தப்பட்ட தனுஷிடமாவது இதை பற்றி கூறி அதன் பிறகு நடிகர் சங்கத்திடம் தனுஷை பற்றி தெரிவித்து இந்த முடிவை எடுத்திருக்கலாம். அதை விட்டு சம்பந்தப்பட்ட நபரிடமும் இதைப் பற்றி பேசாமல் நடிகர் சங்கத்திடமும் கூறாமல் முடிவை எடுத்திருப்பது சரியாகப்பட வில்லை.
மேலும் சினிமாவில் எல்லாருமே ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதுவும் தமிழ் சினிமாவின் நிலைமையே இப்போது மோசமாகிக் கொண்டே போகின்றது. அதனால் இதை இன்னும் பெரிதாக்காமல் சுமூகமாக பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என நடிகர் சங்கத்திடம் இதை ஒரு வேண்டுகோளாக கேட்கிறேன் என செல்வமணி கூறியிருக்கிறார்.