இப்படி ஒரு ஸ்ட்ரேடஜியா? கவினுடன் நயன் ஜோடி சேர்ந்ததன் பின்னனி இதோ..

by ராம் சுதன் |

தென்னிந்திய சினிமாவிலேயே நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி என பிறமொழிகளிலும் நடித்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு ஒரு டாப் நடிகையாக வலம் வரும் நயன் கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கிறார். தற்போது கூட கவினுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.

அது சம்பந்தமான புகைப்படம்தான் நேற்று இணையதளத்தில் வைரலானது. புதுமுக இயக்குனர் விஜய் எடவன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ஒரு படத்தில் நயன் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். கதைப்படி தன்னை விட வயது மூப்புடைய ஒரு பெண்ணை காதலிக்கும் கதாபாத்திரத்தில் கவின் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு வகையாக சுவாரஸ்யமான காதல் கதையாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் கண்டபடி கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். அதோடு இருவருக்கும் கெமிஸ்ட்ரியே இல்லை என்று போஸ்டரை பார்த்து விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலர் நயனின் கடைசி தம்பி போல இருக்கிறார் கவின் என்றும் கூறி வருகிறார்கள்.

ஆனால் இது நயனின் ஒரு புதிய உத்தியாகக் கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அவர் முதன் முதலில் ஐயா படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் வயதை ஒப்பிட்டு பார்க்கும் போது நயனை விட சரத்குமார் எவ்வளவு மூத்தவர் என அனைவருக்குமே தெரியும். அதனால் அடுத்தடுத்த படங்களிலும் அவருக்கு ஜோடியாக வயது மூப்புடைய நடிகர்கள்தான் நடிப்பது மாதிரி வாய்ப்பு வந்திருக்கிறது.

அதனால் திடீரென சிம்புவுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அந்த காம்போ எந்தளவு பிரபலமானது என அனைவருக்கும் தெரியும். அதனால் அதே மாதிரியான ஒரு யுத்தியைத்தான் இப்போதும் நயன் ஃபாலோ செய்கிறார் என வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.

நயன் கடைசியாக யாருடன் நடித்தார் என பாருங்கள். அதை சரிகட்டவே இப்போது கவினுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் என கூறினார். அவர் சொன்னதை பார்க்கும் போது ரஜினி ஷாரூக்கான் இவர்களுடன்தான் கடைசியாக நடித்தார் நயன் .

Next Story