ரிலீஸ் ஆனாலும் சிக்கல்.. ஆகலைனாலும் சிக்கல்! படப்பிடிப்பு முடிந்தும் ‘விடாமுயற்சி’யில் இப்படி ஒரு பிரச்சினையா?

by ராம் சுதன் |

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. ஆரம்பத்தில் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் வேறொரு கதையம்சத்தோடு எடுப்பதாக இருந்தது. ஆனால் விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்ட் லைக்கா நிறுவனத்திற்கு திருப்திகரமாக இல்லை. அதனால் இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.

இப்படி ஆரம்பத்திலேயே பிரச்சினைகளை சந்தித்த இந்தப் படம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்தது. அதன் பிறகு மகிழ்திருமேனி இந்தப் படத்திற்குள் நுழைந்தார். ஸ்கிரிப்டை தயார் செய்தார். ஒட்டுமொத்த படக்குழுவும் அஜர்பைஜானுக்கு சென்றது. சென்ற வேகத்தில் படப்பிடிப்பு சூடுபிடித்தது.

கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் லைக்கா நிறுவனத்திற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட மீண்டும் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டது. இப்படியாக கேப் விட்டு கேப் விட்டு எப்படியோ ஒரு வழியாக அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்துவிட்டனர். அடுத்ததாக ஒரு 12 நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கும் நிலையில் வரும் 29 ஆம் தேதியில் இருந்து ஐதராபாத்தில் சூட்டிங் ஆரம்பமாக உள்ளது.

இதற்கடுத்தப்படியாக போஸ்ட் புரடக்‌ஷனில் படக்குழு தீவிரமாக இறங்கிவிடும். இப்படி இருக்கும் பட்சத்தில் விடாமுயற்சி படத்தை தீபாவளி அன்று எதிர்பார்க்கலாமா? என மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவிடம் கேட்க அவர் கூறியதாவது. தீபாவளிக்கு நினைத்தால் படத்தை கொண்டு வந்து விடலாம். எனக்கு கிடைத்த தகவலின் படி 80 சதவீதம் தீபாவளிக்கு படத்தை கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது.

SK வா? AK வா? என இப்படி ஒரு மோதல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பதால் அஜித் இந்தப் போட்டியை விரும்பமாட்டார். அதே சமயம் மகிழ் திருமேனி மிகவும் பெர்ஃபெக்‌ஷன் பார்க்கிறவர். அதனால் போஸ்ட் புரடக்‌ஷனில் மிகுந்த கவனமுடன்தான் செயல்படுவார்.

இப்படி பார்க்கும் போது படம் தீபாவளிக்கு வரவில்லை என்றால் படம் அப்படியே டிசம்பரில் ரிலீஸ் ஆகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்றால் டிசம்பரில் ரிலீஸானால் அடுத்த ஜனவரியே குட் பேட் அக்லி திரைப்படத்தை லாக் செய்து வைத்திருக்கின்றனர். அதனால் அடுத்தடுத்து அஜித்தின் படங்கள் வெளியாகும் பட்சத்தில் அவருக்கான க்ரேஸ் குறையவும் வாய்ப்பிருக்கிறது என செய்யாறு பாலு கூறினார்.

Next Story