வந்தாச்சு அப்டேட்... இந்த தேதிய குறிச்சு வச்சுக்கோங்க... விடாமுயற்சிக்கு வந்த விடிவுக்காலம்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:44  )

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் தொடர்ந்து சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து 2 ஆண்டுகளாக நடிகர் அஜித்தின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.

கடந்த சில வருடங்களாக அஜித் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் அப்டேட்டுக்காக காத்திருக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக விடாமுயற்சியின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகர் அஜித் எப்போதும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு தான் மற்றொரு திரைப்படத்தை கமிட் செய்வார்.

ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கூட விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படம் தொடங்கி சிறிது நாட்களிலேயே ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என்று தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது. ஒரு கட்டத்திற்கு மேல் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்திற்கு அப்டேட் கேட்பதையே நிறுத்திவிட்டார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக பட குழுவினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன்படி விடாமுயற்சியின் டீசர் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வருமா அல்லது குட் பேட் அக்லி திரைப்படம் வருமா என்பது தெரியவில்லை. மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று குட் பேட் அக்லி திரைப்படத்தை வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

Next Story