மகிழ் திருமேனியின் உண்மையான பெயர் இதுதானா?.. பேர மாத்துனதுக்கு இப்படி ஒரு காரணமா?..

Director Mazhil Thirumeni: தமிழ் சினிமாவில் விடாமுயற்சி திரைப்படத்தின் மூலமாக தற்போது புகழின் உச்சிக்கு சென்று இருக்கின்றார் இயக்குனர் மகிழ் திருமேனி. செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மகிழ் திருமேனி தடையற தாக்க என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அருண் விஜய் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து மீகாமன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதற்கு அடுத்ததாக மீண்டும் நடிகர் அருண் விஜய் வைத்து தடம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கடைசியாக நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து கழகத் தலைவன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் மொத்தம் 5 திரைப்படங்களை இயக்கி இருந்த நிலையில் 6வதாக நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்புகள் மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.
விடாமுயற்சி திரைப்படம்: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருந்த மகிழ் திருமேனி நடிகர் அஜித்தின் 62 வது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார். முதலில் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் பின்னர் சில பிரச்சினைகள் காரணமாக அவர் விலகிவிட்டார்.
அதனை தொடர்ந்து மகிழ் திருமேனிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தை கடந்த 2 வருடங்களாக இயக்கி வந்தார் மகிழ் திருமேனி. இதற்காக பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தார். பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனது.
படம் வெளியாகி ரசிகர்களுடைய கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால் இந்த திரைப்படத்தின் மூலக்கதை இயக்குனர் மகிழ் திருமேனி உடையது கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தை ரீமேக்ஸ் செய்து விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
மகிழ் திருமேனி உண்மை பெயர்: விடாமுயற்சி திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது மகிழ் திருமேனி என்பது தன்னுடைய உண்மையான பெயர் கிடையாது புனைப்பெயர். தூய தமிழில் தனக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசையால் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டதாக கூறியிருந்தார். அந்த சமயத்தில் உங்களுடைய உண்மையான பெயர் என்ன என்று கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டார் மகிழ்.
அவருடைய உண்மையான பெயர் வெளிவந்துள்ளது. அதாவது அவருடைய பெயர் Morgan Anthony என்பதுதான். அவரின் பெயரை மாற்றுவதற்கு என்ன காரணம் என்பதை அவர் கூறியிருக்கின்றார். அதாவது இந்த பெயரை தமிழில் எழுதினால் மோர்க்குனு வரும், இல்லையென்றால் மார்க்குனு வரும். இந்த பெயரை தமிழில் சரியாக எழுத முடியாது.
இதுதான் என் பெயரை நான் மாற்றிக் கொள்வதற்கு முதல் காரணம். இரண்டாவது காரணம் என்னுடைய பெயர் தூய தமிழில் இருக்க வேண்டும் என்கின்ற ஆசை காரணமாக நான் வைத்துக் கொண்ட புனைப் பெயர்தான் மகிழ் திருமேனி என்று கூறியிருக்கின்றார்.