எல்லாம் ‘சூர்ய’மையம்! சரணாகதி அடைஞ்சதுக்கு இதுதான் கதி.. பிக்பாஸிலிருந்து கமல் விலக இதுதான் காரணமா?
திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் கமல். கடந்த ஏழு சீனன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் எட்டாவது சீசனில் தான் கலந்து கொள்ள வில்லை என்றும் இந்த சீசனிலிருந்து தான் விலகுவதாக என்றும் அந்த அறிவிப்பில் கூறியிருந்தார் கமல்.
இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில் உலகெங்கிலும் இந்த நிகழ்ச்சி பிரபலமாகியிருக்கிறது என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பவர் நடிகர் கமல்தான். அவர் தொகுத்து வழங்கும் விதம், போட்டியாளர்களை கேள்வி கேட்கும் விதம் என அனைவரையும் ஈர்த்தது.
அவர் வரும் அந்த சனி மற்றும் ஞாயிறு கிழமை எபிசோடுகள் மட்டும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தனது பணிச்சுமை காரணமாக விலகுவதாக அறிவித்திருந்தார் கமல்.
ஆனால் அதற்கு பின்னணியில் வேறு ஒரு காரணம் இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதாவது கமல் அரசியலுக்குள் வந்த பிறகு மக்களிடம் சரியான ரீச்சை பெறமுடியவில்லை.யாரும் அவருக்கு அந்த நேரத்தில் சப்போர்ட்டாகவும் இல்லை.
அந்த நேரத்தில் விஜய் டிவிதான் பெரிய சப்போர்ட்டாக கமலுக்கு இருந்தது. அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் கருத்துக்களையும் நோக்கங்களையும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார். ஏன்? விக்ரம் பட ப்ரோமோஷனையும் இந்த நிகழ்ச்சி மூலம் நடத்தினார்.
ஆனால் எப்போது அவர் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டாரோ அதிலிருந்தே விஜய் டிவிக்கும் கமலுக்கும் இடையே ஒரு சின்ன விரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படம் ப்ரோமோஷனை விஜய் டிவியின் வாயிலாக நடத்திய கமல் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனை சன் டிவிதான் நடத்தியது.
இப்படி அந்தப் பக்கம் முழுவதும் கமல் சாய பின் எப்படி அவர் விஜய் டிவிக்கு வர முடியும் என பல கேள்விகள் சோசியல் மீடியாவில் முன்வைக்கப்படுகின்றன. மற்றபடி சினிமா கமிட்மெண்ட்ஸ் என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை என்றும் ஏதேதோ செய்திகள் பரவிக் கொண்டு வருகின்றன.