ஜீவிக்கும் தனுஷுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்கா? அநியாயத்தை தட்டி கேட்டது தப்பா?
தனுஷின் சமீபகால படங்கள் வெற்றியடைவதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதை ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும் படத்தில் அமைந்த ஜிவியின் இசையும் ஒரு காரணமாகும் . அசுரன் படத்தில் டம்மியாக இருக்கும் தன் தந்தை ஒரு கட்டத்தில் தன் மகனுக்காக பொங்கி எழும் போது ஒலிக்கும் பிஜிஎம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் புல்லரிக்க வைத்தது. இப்படி பொல்லாதவன், ஆடுகளம் என ஜிவியின் இசை மேலும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
ஆனால் இப்போது அவர் நடித்த 50 வது படமான ராயன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதுவே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் ஏற்கனவே தனுஷுக்கும் ஜீவிக்கும் இடையே இருக்கும் கருத்துவேறுபாடு தான் என மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.அதாவது அசுரன் படத்திற்கே ஜிவி வேண்டாம் என தனுஷ் சொன்னதாக செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறினார்.
ஆனால் வடசென்னை படத்தில் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார். இதுவும் தனுஷ் சொன்னதால்தான் சந்தோஷ் நாராயணனை வெற்றிமாறன் கமிட் செய்தாராம். கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கை அதிகம் விரும்பும் நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் தனுஷ் ,இரண்டாம் இடத்தில் சூர்யா, நான்காம் இடத்தில் விஜய் இருப்பதாக ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கின்றது.
இதை டேக் செய்த ஜிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய்தான் முதலிடத்தில் வரவேண்டியது. இது ஒரு மோசமான செயல் என்பது மாதிரி பதிவிட்டிருந்தாராம். கூடவே ஒரு ஆடியோவையும் சேர்த்து பதிவிட்டிருந்தாராம். அந்த ஆடியோவில் அந்த ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் ஜிவிக்கு தொலைபேசியில் அழைத்து ‘இந்த வருடம் அதிகம் விரும்பும் நடிகர்களில் விஜய்தான் முதலிடத்தில் இருக்கிறார்.
அதனால் விஜயிடம் ஒரு நான்கு கேள்வி கேட்கவேண்டும். நீங்கள் விஜய்க்கு நெருக்கமானவர் ஆச்சே. அதனால் அவரை சந்திப்பதற்கு ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து தரவேண்டும்’ என கேட்டாராம். இதுதான் அந்த ஆடியோவில் பதிவாகியிருந்தது. ஏனெனில் அந்த நேரத்தில் தெறி படத்தில் இசையமைத்துக் கொண்டிருந்தார் ஜிவி. இதனடிப்படையில்தான் அந்த நிருபர் இந்த மாதிரி கேட்டிருக்கிறார்.
ஜீவிக்கும் தனுஷுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்கா? அநியாயத்தை தட்டி கேட்டது தப்பா?ஆனால் ஜிவி ‘அதெல்லாம் என்னால் ஏற்பாடு செய்து தர முடியாது’ என்பது போல் பேசிவிட்டாராம். இன்னொரு பக்கம் தனுஷ் ‘ நான் பேட்டி தருகிறேன்’ என கூறினாராம். இதை பற்றீ செய்யாறு பாலு கூறியது என்னவெனில் ‘ஒரு வேளை தனுஷ் என் பெயரை முதலிடத்தில் போட்டால்தான் நான் பேட்டி கொடுப்பேன்’ என்று சொன்னாரோ இல்லையோ தெரியவில்லை. அவர் பேட்டி கொடுத்ததால் அந்த பட்டியலில் தனுஷ் பெயர் முதலிடத்தில் இடம்பெற்றது. இதிலிருந்துதான் தனுஷுக்கும் ஜிவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என செய்யாறு பாலு கூறினார்.