அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் உள்ளே வந்த சுவாரஸ்ய பின்னணி… அடடா!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:14  )

Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் எண்ட்ரி கொடுத்த சுவாரஸ்ய பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் அமரன். இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. மறைந்த ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை ஒரு படத்தில் படித்த ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய முயற்சியால் சோனி மற்றும் கமலை இணைத்தார். இதை தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இடையே இப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஹீரோவாக யாரை போடலாம் என முதலில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் புதுமுகங்களை நடிக்க வைக்கலாம் எனக் கேள்வி எழுந்தது. ஆனால் பெரிய பட்ஜெட்டிலே இப்படத்தை எடுக்கலாம் என்ற முடிவில் முன்னணி ஹீரோவை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தனர்.

அதை தொடர்ந்தே இன்னொரு ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தியது, தேசப்பற்று அதிகம் கொண்ட சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். அதை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி, சிவாவை நேரில் சந்தித்து இருக்கிறார்.

பொதுவாக சிவகார்த்திகேயன் தன்னிடம் கதை சொல்லுபவர்களுக்கு உடனே ஓகே சொல்ல மாட்டாராம். ஆனால் ராஜ்குமார் பெரியசாமி கதையை சொல்ல தொடங்கியதுமே சிவா அதில் ஒன்றில் ஓகே சொல்லாமலே சீன்னை அப்படி செய்யலாம். இப்படி செய்யலாம் எனப் பேச தொடங்கிவிட்டாராம்.

வீட்டிலே 9 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவை தாண்டியும் தொடர்ந்ததாம். ஒரு கட்டத்தில் ராஜ்குமார் வீட்டிற்கு செல்ல மெசேஜில் பேச தொடங்கினார்களாம். இதை தொடர்ந்து காலை 7 மணிக்கே அமரன் படம் ஓகே என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமரன் படம் உருவானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story