கிழிந்த மணிரத்னம் முகமூடி.. ஒரு கதையை வச்சு எத்தன படம்… தாங்குமா தக் லைஃப்?..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:17  )

Thuglife: மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்தின் முக்கிய தகவல் கசிந்திருக்கும் நிலையில் இந்த படமும் கமலுக்கு காலை சறுக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

2022ம் ஆண்டு கமல்ஹாசனின் 234 வது திரைப்படமாக இது அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு மணிரத்னம் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் பிரம்மாண்டமாக நடந்து சமீபத்தில் முடிந்திருக்கிறது. முதலில் இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

ஆனால் இருவரும் தங்களுடைய மற்ற படங்களின் கால்ஷீட் பிரச்சனையால் படத்தில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் இப்படத்திற்குள் உள்ளே வந்தார். இன்னொரு நாயகனாக அசோக் செல்வனையும் இப்படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக கூறப்பட்டது.

சைபீரியா, நியூ டெல்லி உள்ளிட்ட முக்கிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது ஷூட்டிங் மொத்தமாக முடிந்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட வேலைகள் நடந்து வருகிறது. தக் லைஃப் திரைப்படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிலம்பரசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் செக்கச் சிவந்த வானம் படத்தின் கதை போலவே இதிலும் தப்பிக்கும் கேங்ஸ்டரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது.

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்து எடுக்கப்பட்டாலும் அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை. தற்போது இதே கதையில் கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்குவது எந்த வகையில் ரசிகர்களை கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story