Thuglife: என்னப்பா இப்பவே சொல்லிட்டீங்க!... தக் லைஃப்ல நாளைக்கு என்ன அப்டேட் வரப்போகுது தெரியுமா?...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:09  )

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவரை லோகேஷ் கனகராஜ் மீண்டும் இழுத்து வந்து விட்டார் என்று தான் கூற வேண்டும். விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார் கமல்ஹாசன். இந்த படத்தின் வெற்றி இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களை கொடுத்து வந்தது.

அந்த வகையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் தக் லைஃப் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் இருவரும் இணையும் திரைப்படம் என்பதால் தக் லைஃப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிகர் சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் தயாரித்து வருகின்றது. மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

கமலஹாசனும் மணிரத்தினமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்கின்ற மிகச் சிறந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள். இன்றுவரை அப்படம் இந்திய சினிமாவில் பலருக்கும் பிடித்த படமாக பார்க்கப்பட்டு வருகின்றது. பல வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் கிளாசிக் படமாக இருக்குமா? அல்லது ஆக்சன் படமாக இருக்குமா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் கமலஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்த காரணத்தால் இந்த திரைப்படம் அவருக்கு சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். நாளை கமலஹாசன் பிறந்தநாள் என்பதால் தக் லைஃப் திரைப்படத்திலிருந்து அப்டேட் வெளியாக இருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் நாளை என்ன அப்டேட் வெளியாக போகின்றது என்பது தொடர்பான தகவல் தற்போது கிடைத்துவிட்டது. அதாவது படத்தின் ரிலீஸ் டேட் டீசர் வெளியாக இருக்கின்றது. படம் எப்போது வெளியாக போகின்றது என்பது தொடர்பான தகவலை ஒரு டீசராக வெளியிட இருக்கிறார்கள். இது கமலஹாசன் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. நாளை கமலஹாசனின் பிறந்தநாள் உடன் சேர்ந்து தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

Next Story