ஷூட்டிங்கு வராத நடிகை!.. திரிஷாவுக்கு அடிச்ச லக்!.. ஹீரோயின் ஆனதே இப்படித்தான்!...

Trisha: திரிஷாவின் நடிப்பு வாழ்க்கையே சுவாரஸ்யமானது தான். அவர் எதற்கோ போய் கடைசியில் ஹீரோயினாக மாறியது குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
படித்துக்கொண்டு இருந்த திரிஷாவிற்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்துள்ளது. இதில் அடிக்கடி பல விளம்பரங்களில் நடித்து வந்தவர். 1999ல் மிஸ் சென்னை பட்டம் பெற்றார். தொடர்ந்து மிஸ் இந்தியா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஸ்மைலுக்கு விருதையும் வென்றார்.
அந்த சமயத்தில் திரிஷாவிற்கு எந்த வாய்ப்பும் வரவில்லை. சின்ன ரோல்களே கிடைத்துள்ளது. அப்படிதான் ஜோடி படத்தில் ஒரு ரோலில் நடித்திருப்பார் திரிஷா. அதை தொடர்ந்து அவர் நடித்த லேசா லேசா மற்றும் எனக்கு 20 உனக்கு 18 படங்கள் அவரின் கேரியரின் முதல் படமாக அமைந்தது.
இருந்தும் அப்படங்கள் ரிலீஸில் தாமதமானதால் அதன் பின் தொடங்கிய மௌனம் பேசியதே ரிலீஸாகியது. ஆனால் லேசா லேசா படமும் திரிஷாவிற்கு நேரடியாக கிடைக்கவில்லையாம். அந்த படத்தில் ஒப்பந்தமானது வேறு ஒரு மும்பை நடிகை தானாம்.
ஆனால் அவரால் இந்த படத்தில் கலந்து கொள்ள முடியாமல் போக அவருக்கு பதில் அந்த படத்தில் ஹீரோயினுக்கு தோழிகளாக ஒப்பந்தமாகி நான்கு நடிகைகள் வந்திருக்கின்றனர். அதில் திரிஷாவும் இருந்து இருக்கிறார். அவரை இந்த படத்தில் ஓகே செய்துள்ளனர்.
ஏற்கனவே ஜோடி படத்திலும் சிம்ரனுக்கு தோழியாக வந்தவர். அதுபோலவே இந்த படத்திலும் ஹீரோயின் தங்கச்சி கேரக்டர்களுக்காக வந்த ரிச் கேர்ள்ஸ் கேரக்டருக்காக தான் வந்துள்ளார். அந்த பாம்பே நடிகை மட்டும் வந்திருந்தா அந்த படத்தில் வரும் பாட்டுல சைடுல தான் திரிஷா ஆடிட்டு இருந்திருக்கணும்.