சொந்தமா சரக்கு கடைய வச்சிட்டு... இவங்க மதுஒழிப்பு பத்தி கிளாஸ் எடுக்குறாக... கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் முதலிடத்தில் இருப்பதும் நடிகர் விஜய். தற்போது சினிமாவை ஓரம் கட்டி விட்டு அரசியலில் குதித்து இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கட்சியின் கொடி, பாடல், மாநாடு என அனைத்தையும் சிறப்பாக நடத்தி முடித்து விட்டார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியது முதலே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் வாழ்த்துகளும் இரண்டுமே குவிந்த வண்ணம் இருக்கின்றன. நடிகர் விஜய் கட்சி தொடங்கியது முதலே தொடர்ந்து அவருக்கு பலர் ஆதரவு கொடுத்து வந்தாலும், சிலர் அவருக்கு எதிராக சில விமர்சனங்களை முன் வைத்து தான் வருகிறார்கள். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் கடைசியாக கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இப்படத்துடன் தனது சினிமா பயணத்தை முடித்துக் கொண்டு முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருக்கின்றார் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் நடிகர் விஜய் அதற்கான வேலைகள் அனைத்தையும் தீவிரமாக செய்து வருகின்றார்.
மேலும் நடிகர் விஜய் மாநாட்டில் ஆக்ரோஷமாக பல விஷயங்களை பேசி இருந்தார். பல கட்சிகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் திட்டி பேசியிருந்தார். அது மட்டும் இல்லாமல் கட்சியின் சார்பாக பல்வேறு கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தது. அதில் முக்கிய ஒன்றாக தமிழகத்தில் நடிகர் விஜய்யின் கட்சி வெற்றி பெற்றால் மது ஒழிப்பு கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அரசியலுக்கு வரும் அனைத்து கட்சியினரும் கூறும் முதல் வாக்குறுதி இது தான். அதேபோல தான் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயும் இந்த வாக்குறுதியை கொடுத்திருக்கின்றார். இந்நிலையில் நடிகர் விஜயின் இந்த வாக்குறுதியை குறித்து பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவர் புதுச்சேரியில் எம்எல்ஏவாக இருந்தவர்.
அவரின் உண்மையான பெயர் என் ஆனந்த். அவர் இருந்த தெருவின் பெயர் புஸ்ஸி என்பதால் பலரும் அவரை புஸ்ஸி ஆனந்த் என்றே அழைக்க தொடங்கினார்கள். எம்எல்ஏவாக மட்டுமல்லாமல் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் சில நாட்களில் நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான நம்பிக்கை கூறிய நபராக மாறிவிட்டார். தற்போது அவர்தான் கட்சியின் பொதுச்செயலாளராக முன் நின்று அனைத்து செயல்களையும் செய்து வருகின்றார்.
இப்படி இருக்கையில் புதுச்சேரியில் அவருக்கு என்று சொந்தமாக மது கடை ஒன்று உள்ளது. பக்கம் பக்கமாக மது ஒழிப்பு குறித்து பேசி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது பொதுச்செயலாளரே மதுக்கடையின் ஓனர் என்பதை மறந்து விட்டாரா? என்று பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் மது ஒழிப்பு குறித்து நமக்கு கிளாஸ் எடுப்பதற்கு முன்பு நீங்கள் அதை சரியாக செயல்படுத்துங்கள் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.