Categories: latest news

இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் இவர்தானா?.. விடாமுயற்சி கதைதிருட்டு விஷயத்தில் புது அப்டேட்..

நடிகர் அஜித்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட 2 திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகின்றார். துபாயிலிருந்து நேற்று சென்னை திரும்பி இருக்கும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் டப்பிங் பணியிலும் கவனம் செலுத்த இருக்கின்றார். அதனை முடித்துவிட்டு குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

விடாமுயற்சி தாமதம்:

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் இயக்கி வருகின்றார். கடந்த 2 வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் எடுக்கப்பட்டு வந்தது.

அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானதாக படக்குழுவினர் தெரிவித்து வந்தார்கள். இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது.

இரண்டு திரைப்படங்களில் ஏதாவது ஒரு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதலில் குட் பேட் அக்லி திரைப்படம் தான் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் திடீரென்று விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வருகின்றது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது.

கதை திருட்டு சர்ச்சை:

இந்நிலையில் படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு புதிய பிரச்சனை வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் திரைப்படத்தின் தழுவல் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இப்படத்தின் ரீமேக் உரிமையை சரியாக வாங்கவில்லை என்றும் இதனால் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் லைக்கா நிறுவனம் தானாம். லைக்கா நிறுவனத்தில் வீரா என்பவர் தான் அக்ரிமெண்ட் தொடர்பான மற்றும் லீகலான விஷயங்களை கவனித்து வருபவர். அவரை திடீரென்று சுபாஸ்கரன் லண்டனுக்கு அழைத்துக் கொண்டதால் அவர் இங்கிருந்து வேலைகள் அனைத்தையும் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் முறையாக படத்தின் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு தவறி விட்டார்கள். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் லண்டன் நிறுவனத்திற்கும் இடையே கம்யூனிகேஷன் சரியாக இல்லை என்பதாலும் இது போன்ற பிரச்சனைகள் தற்போது எழுந்திருப்பதாக சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

2 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

4 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

11 hours ago