என்னைக்காவது மதிச்சிருக்காரா? வெட்கமா இல்ல? அஜித்தே கடவுளே கோஷத்திற்கு எதிராக பொங்கிய பிரபலம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:45  )

இன்று சோசியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் அஜித்தே கடவுளே அஜித்தே கடவுளே என்ற கோஷம்தான். ஒரு கும்பல் அஜித்தே என சொல்லும்போது எல்லோரும் கடவுளே என சொல்லுவதை பல இடங்களில் நாம் சமீப காலமாக பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட ஹிப்பாப் ஆதி ஒரு இசை கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கு வந்திருந்த கூட்டத்தில் சில பேர் அவருடைய பாடலையும் கேட்க விடாமல் அஜித்தே கடவுளே எனக்கு கத்தி ஆரவாரம் செய்தனர். அதில் விஜய் ரசிகர்களும் இருக்கத்தானே செய்வார்கள். இவர்கள் சொன்னதற்கு எதிராக விஜய் ரசிகர்களும் விஜய்யே கடவுளே என அவர்களும் தன்னுடைய பங்குக்கு கோஷமிட்டு வந்தனர்.

இந்த மாதிரி எல்லா இடங்களிலும் நடந்து கொண்டு வருகின்றது. நாங்கள் மட்டும் சும்மா இருப்போமா என ரஜினி ரசிகர்களும் ரஜினியே கடவுளே என அவர்களும் இப்போது இதை ஆரம்பித்து விட்டார்கள். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் சில பள்ளி மாணவிகள் அனைவரும் சேர்ந்து சரஸ்வதி பூஜை அன்று சாமி படங்களுக்கு மத்தியில் அஜித்தின் ஒரு புகைப்படத்தை வைத்து கடவுளாகவே நினைத்து கொண்டாடி வந்த வீடியோ வைரலானது.

இதை பார்க்கும் பொழுது இப்படியும் சுய அறிவு இல்லாத ரசிகர்கள் இருக்கிறார்களா என வேடிக்கையாக தான் இதை பார்க்க தோன்றியது. அதைப்போல விஜய் ரசிகர்களும் இதே மாதிரி சாமி படங்கள் முன் நின்று விஜயே கடவுளே என கோஷமிட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது.

இப்படி மாறி மாறி பெரிய நடிகர்களின் ரசிகர்கள் இப்போது இந்த மாதிரி ஒரு ட்ரெண்டை ஆரம்பித்து இருக்கிறார்கள். இது பார்க்கிறவர்களை எரிச்சல் அடைய வைக்கின்றது. இதை அஜித் விரும்புவாரா ?இல்லை விஜய்தான் விரும்புவாரா ?ரஜினி விரும்புவாரா என்றால் இவர்கள் மூன்று பேருமே இதை விரும்ப மாட்டார்கள். இந்த காட்டுமிராண்டி கூட்டத்தை என்ன செய்வது என தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் அடங்குகிற மாதிரி தெரியவில்லை. இது ஒரு ஃபன்னு தான். உங்கள மாதிரியான வயதானவர்களுக்கு புரியாது. 18, 20 வயதில் உள்ள பசங்களுக்கு தான் புரியும் என இதை எதிர்த்து கேள்வி கேட்டவர்களுக்கு அஜித் ரசிகர்கள் கமெண்ட்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது ஒரு ஃபன் என செய்யும் இவர்களின் செயல் பின்னாளில் அவர்களுக்கு பெரிய வேதனையை கூட ஏற்படுத்தும்.

ரசிங்க. படத்தை ரசிங்க .கொண்டாடுங்க .ஆனால் உங்களை துளி கூட மதிக்காத மனுஷனை எல்லாம் எதுக்குடா தூக்கி வச்சி கொண்டாடுறீங்க என்பதுதான் நமது கேள்வியாக இருக்கிறது. அஜித் என்றைக்காவது உங்களை மதித்திருக்கிறாரா? அவர் நடிக்கிற படத்தையாவது மதிச்சி இருக்காரா? அவருக்கு முழுக்க முழுக்க மனம் முழுவதும் நிறைந்திருப்பது ரேஸுதான்.

அங்க அவர் ஒருத்தரிடம் பேசும் விதத்தையும் இங்கு ரசிகர்களிடம் பேசும் விதத்தையும் பார்க்கும் பொழுது ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. வந்து தொலைஞ்சிட்டாங்களே பாவிகளா என்பது போல ரசிகர்களை பார்த்ததும் அஜித்தின் பார்வை இப்படித்தான் இருக்கும் .

ஏர்போர்ட்டை தாண்டி வேறு எங்காவது அஜித்தை பார்த்து இருக்கிறீர்களா அப்போ உங்களை மதிக்கவே மதிக்காத ஒரு மனுஷனை எதுக்குடா கடவுளே கடவுளே என கத்துகிறீர்கள்? வெட்கமா இல்ல உங்களுக்கு? என வலைப்பேச்சு அந்தணன் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Next Story