தலனு கூப்பிட வேண்டானு சொல்லிட்டு எம்ஜிஆர் ஆகலாம்னு பாக்குறாரு அஜித்.. பிரபலம் காட்டம்

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் நடிகர்கள் அனுமதி இல்லாமல் எதுவுமே நடக்காது. அது பாடல் வரியாக இருந்தாலும் சரி .போஸ்டர் டிசைனாக இருந்தாலும் சரி. ஹீரோக்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் பாடல் வரியிலும் வந்து விட முடியாது. போஸ்டர் டிசைன் ஆகவும் வர முடியாது. அதுவும் இன்றைய சூழலில் பல ஹீரோக்கள் மீடியாக்களுக்கு நீங்கள் என்ன ஸ்டில்ஸ் கொடுக்க வேண்டும் என்பதை ஹீரோக்கள் தான் முடிவு செய்கிறார்கள்.

ஒவ்வொரு புகைப்படத்தையும் அவர்கள் செலக்ட் பண்ணி தான் கொடுக்கிறார்கள். அப்படி பார்க்கும் பொழுது கமலஹாசனை எடுத்துக் கொண்டால் உலகநாயகன் என்ற அடைமொழி கமலுக்கு நிச்சயமாக பொருந்தாது. ஏனெனில் உலக அளவில் எந்த விருதுகளையும் அவர் வாங்கவில்லை. உலக தரமான படங்களில் நடித்திருக்கிறார். அது வேற விஷயம். ஆனால் ஏ ஆர் ரகுமான் மாதிரி ஒரு ஆஸ்கார் மேடையிலோ மற்ற மேடைகளிலோ எந்த ஒரு விருதையும் அவர் வாங்கவில்லை .

ஆனால் மக்கள் ஒரு ஆர்வக்கோளாறில் இவர் ஒரு உலகத்தரமான நடிகர் என நினைத்து உலக நாயகன் என அழைத்தார்கள். அதை கமல் தரப்பிலும் ஏதோ ஒரு பில்டப் மாதிரி இவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு வந்து விட்டார்கள். அவர் நடித்த படத்திலேயே உலகநாயகன் என்ற ஒரு வரி எல்லாம் வைத்தார்கள். அதுவும் கமலின் சம்மதத்தோடு. அப்படிப்பட்ட கமல்ஹாசனுக்கு ஒரு கட்டத்தில் ஒரு பக்குவமும் ஒரு புரிதலும் வந்துவிட்டது .இது ரொம்ப தப்பா இருக்கு என நினைத்துக் கொண்டு அந்த பட்டத்தை அவர் துறந்தார் .

ஆனால் முதன் முதலில் இந்த பட்டம் எல்லாம் வேண்டாம் என துறந்தவர் அஜித். ஆனால் அஜித் விஷயத்திலயும் நாம் சிலவற்றை உற்று நோக்க வேண்டும். என்னை தலை என கூப்பிடாதீர்கள், அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் எனக்கு வேண்டாம் என்றெல்லாம் சொன்னதற்கு நாம் அவர்களை பாராட்ட வேண்டும். ஆனால் அஜித் சொல்லும்போது தலன்னு கூப்பிடாதீங்க. அஜித் குமார் என கூப்பிடு என சொல்ற வரைக்கும் சரி.

ஆனால் ஏகேனு கூப்பிடுனு ஒரு வார்த்தையை சேர்த்து சொல்கிறார். இதுதான் மிகவும் தவறானது. ஏனெனில் இதற்கு பின்னணியில் இவர்கள் எம்ஜிஆர் மாதிரி ஆக வேண்டும் என்ற முயற்சியில் இந்த மாதிரி எல்லாம் கூறிக் கொண்டு வருகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். சிவகார்த்திகேயன் எஸ்கே என மாறினார். ஜெயம் ரவியும் உடனே ஜேஆர் என்று போட ஆரம்பித்தார்.

இவர்களை எல்லாம் தாண்டி தனுஷ் டி என போட ஆரம்பித்தார். நேற்று முளைத்த பிரதீப் ரங்கநாதன் கூட பிஆர் என போட ஆரம்பித்து விட்டார். இதுவே ஒரு ஆபத்தானது. உனக்கு எதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள் .கூப்பிடுவதற்கு தானே .அதோடு நீ அனுமதிக்க வேண்டியது தானே. அதையும் சுருக்கி ஒற்றை எழுத்தாக இரட்டை அழுத்தாக மாற்றி நாமளும் இன்னொரு எம்ஜிஆர் ஆகலாம் என்ற ஆசை அவர்களுக்குள் இருப்பதாக நான் நினைக்கிறேன் .அதனால் வெறும் அடை மொழியையும் பட்டத்தையும் மட்டும் துறந்தால் போதாது .நீங்கள் உங்களுடைய ஒரிஜினல் பெயருடன் இருக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம் என வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story