கோர்த்துவிட்ட வெங்கட்பிரபு!.. இப்ப என்னடா செய்வீங்க?!.. ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய விஜய் ஃபேன்ஸ்...
Vettaiyan: பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அந்த படத்தை பார்க்க வேண்டும் என எல்லா நடிகர்களும் பார்க்க ஆசைப்படுவார்கள். ரஜினியும், கமலும் எம்.ஜி.அர், சிவாஜிக்கு ரசிகராக இருந்தது போல ரஜினி, கமலுக்கு பின்னால் நடிக்க வந்த இளம் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
விஜய் சிறுவயதிலிருந்தே ரஜினி ரசிகராக வளர்ந்தவர்தான். அவர் வளரும்போது நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்களில் ரஜினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். இதை அஜித்தும் செய்திருக்கிறார். இப்போதுள்ள இளம் நடிகர்கள் எல்லோருமே ரஜினி, கமல் ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.
ரஜினி படம் வெளியானால் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆசைப்படும் நடிகர் பலரும் இருக்கிறார்கள். தனுஷெல்லாம் தொடர்ந்து அதை செய்து வருகிறார். வேட்டையன் படம் வெளியான போது சென்னை ரோகிணி தியேட்டரில் முதல் காட்சி பார்த்தார் தனுஷ். நடிகர் விஜய் தீவிர ரஜினி ரசிகர் என்பது அவருடன் நெருக்கமாக பழகுபவர்களுக்கு தெரியும்.
நண்பர்கள் வட்டாரத்தில் ரஜினியை ‘தலைவர்’ என்றே சொல்லுவார் விஜய். ஆனால், இது புரியாமல் விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வேட்டையன் படம் ரிலீஸான அன்றும் டிவிட்டரில் அசிங்கமாக ஹேஷ்டேக் போட்டு ரஜினியை திட்டி வந்தார்கள்.
அதேநேரம், சென்னை தேவி தியேட்டரில் வெங்கட்பிரபும், விஜயும் வேட்டையன் படம் பார்க்க சென்றதாக செய்தியோடு புகைப்படம் மற்றும் வீடியோவும் வெளியானது. ஆனால், அது விஜய் இல்லை என சிலர் சொன்னார்கள். ‘இல்லை.. அது விஜய்தான்.. முக்கிய படங்களை தேவி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கும் பழக்கம் விஜய்க்கு இருக்கிறது’ என விபரமறிந்தவர்கள் சொன்னார்கள்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட்பிரபு ‘ஆமாம்.. நானும் விஜய் சாரும் வேட்டையன் பார்த்து என்ஜாய் செய்தோம். நாங்கள் எல்லோருமே ரஜினி ரசிகர்கள்தானே’ என கூலாக சொல்லி இருக்கிறார். இந்த தகவலை பகிர்ந்து ‘உங்க விஜயே தலைவர் ரசிகர்தான். இப்ப முகத்த எங்கட வச்சிக்குவீங்க’ என ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.