Connect with us

Cinema News

பந்தா பண்ணி எல்லாம் போச்சி!.. பாலிவுட் பக்கம் போன வெங்கட்பிரபு!.. அவர்தான் ஹீரோவாம்!…

Venkat prabu: இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மூத்த மகன்தான் வெங்கட் பிரபு. சில திரைப்படங்களில் நடித்த இவர் சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறினார். இவருக்கென ஒரு நண்பர் கூட்டம் இருக்கிறது. அவர்களை வைத்தே அந்த படத்தை இயக்கினார். இவரின் எல்லா படங்களிலும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைப்பார்.

சென்னை 28 ஹிட் அடிக்கவே சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இதில் அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து அஜித்தை மாஸ் ஹீரோவாக மாற்றியது. இந்த படத்திற்கு பின் சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்கள் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை.

பல வருடங்களாகவே விஜயை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை வெங்கட்பிரபுவுக்கு இருந்தது. அது கோட் மூலம் நிறைவேறியது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க கோட் படம் உருவானது. மகன் விஜயை இளமையாக காட்ட அமெரிக்கா சென்று ஏ.ஐ தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார்கள். அது ஓரளவுக்கு மட்டுமே சரியாக அமைந்தது. ஆனாலும் கோட் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று கொடுத்துவிட்டது.

விஜயை வைத்து படம் இயக்குகிறார் என தெரிந்ததும் வெங்கட்பிரபுவுக்கு சில பெரிய நடிகர்கள் தூதுவிட்டார்கள். இதில், சிவகார்த்திகேயனும் ஒருவர். அப்படித்தான் கோட் படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு காட்சியில் நடிக்க வைத்தார் வெங்கட்பிரபு. வேறு சில ஹீரோக்களிடம் ‘கோட் படத்தை முடித்துவிட்டு வருகிறேன்’ என சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு.

என்ன காரணமோ கோட் படம் வெளியான பின் எந்த பெரிய நடிகரும் வெங்கட்பிரபுவை தேடி வரவில்லை. சிவகார்த்திகேயனும் கையில் நிறைய படங்கள் இருப்பதை காரணம் காட்டி காத்திருக்க சொல்லிவிட்டார். அதனால்தான் கோட் படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.

தமிழ் சினிமா நடிகர்கள் பிஸியாக இருப்பதால் பாலிவுட் பக்கம் போய் அக்‌ஷய் குமாரிடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார் வெங்கட்பிரபு. ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் 10 மாதங்கள் ஆகும் எனத்தெரிகிறது. எனவே, இந்த இடைவெளியில் வேறு யாரையாவது வைத்து வெங்கட்பிரபு படத்தை இயக்குவாரா இல்லையா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top