கோட் படத்தில் வெங்கட்பிரபு செய்த சம்பவம்!.. உலக நாயகனையே ஓவர் டேக் பண்ணுவார் போல!...

by ராம் சுதன் |

சென்னை 28 படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் வெங்கட்பிரபு. இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் இவர். இயக்குனராவதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை.

சென்னை 28 வெற்றி பெற்றதால் தொடர்ந்து சாரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். ஆனால், அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படத்தின் வெற்றியால் முன்னணி நடிகர்களின் பார்வை வெங்கட்பிரபு பக்கம் திரும்பியது. சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து படங்களை எடுத்தார்.

இரண்டுமே ஓடவில்லை. அதன்பின் சிம்புவை வைத்து மாநாடு படத்தை எடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, வெங்கட்பிரபுவின் கிராப் மீண்டும் மேலே போனது. இப்போது விஜயை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கும் விஜயை மிகவும் இளமையாக காட்டவிருக்கிறார்.

ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் ஏஜிங் தொழில்நுட்பம் கோட் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சினிமாவில் புது தொழில்நுட்பம் வந்தால் கமல்தான் முதலில் அதை முயற்சி செய்து பார்ப்பார். ஆனால், இந்த முறை இது வெங்கட்பிரபுவுக்கு போய்விட்டது.

அதுமட்டுமில்லை. இந்த படத்தில் சினேகாவுக்கு டப்பிங் கலைஞர் சவீதாவை வைத்து குரல் கொடுக்கலாம் என முடிவு செய்தனர். இவர்தான் ஜோதிகா, சிம்ரன், லைலா ஆகியோருக்கு குரல் கொடுத்தவர். ஆனால், இப்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். வருவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என சொல்லிவிட்டார்.

சமீபகாலமாக மொபைல் டப்பிங் என்பது பிரபலமாகி வருகிறது. அதாவது டப்பிங் பேச நடிகர்கள் டப்பிங் தியேட்டருக்கு வர தேவையில்லை. நடிகர் இருக்கும் இடத்திற்கு ஒரு வேன் போகும். அதிலேயே எல்லா வசதிகளும் இருக்கும். அப்படி அமெரிக்காவில் ஒரு டப்பிங் வேனில் சவீதா பேச அதை சென்னையில் இருந்து காட்சிகளோடு இணைத்திருக்கிறார் வெங்கட்பிரபு..

வெங்கட்பிரபு உலக நாயகனயே ஓவர்டேக் செய்து விடுவார் போல!...

Next Story